Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ராஜஸ்தான் வீரர்கள் ஒவ்வொருத்தரும் மாறணும்... அப்பதான் அவங்களால நிலைக்க முடியும்... சோப்ரா உறுதி

சென்னை : ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் 3ல் தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.

அந்த அணியின் வீரர்கள் காயம் காரணமாக அணியில் சிறப்பாக தொடர்ந்து பங்கேற்க முடியாத நிலை காணப்படுகிறது.

இந்நிலையில் அணி வீரர்கள் தங்களது அணுகுமுறையை எவ்வாறு மாற்றிக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இறுதி இடத்தில் ராஜஸ்தான்

இறுதி இடத்தில் ராஜஸ்தான்

ஐபிஎல் 2021 தொடரின் 4 போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. கடந்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் 4 ரன்களில் தோல்வி அடைந்தது. இறுதிகட்டம் வரை போராடி தோல்வி காண்பது அணியின் வாடிக்கையாக உள்ளது.

காயத்தால் விலகல்

காயத்தால் விலகல்

இந்நிலையில் அணியின் ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். இதேபோல பென் ஸ்டோக்சும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பொருட்டு நாடு திரும்பியுள்ளார். லியாம் லிவிங்ஸ்டோன் பயோ பபுள் விதிமுறைகளை காரணம் காட்டி இங்கிலாந்து திரும்பியுள்ளார்.

ஆகாஷ் சோப்ரா அறிவுறுத்தல்

ஆகாஷ் சோப்ரா அறிவுறுத்தல்

இவ்வாறு அந்த அணியின் அடுத்தடுத்த வீரர்கள் காயம் உள்ளிட்ட காரணங்களால் அணியிலிருந்து விலகிவரும் நிலையில் இன்றைய தினம் கேகேஆர் அணியுடன் ஐபிஎல் 2021 தொடரின் 18வது போட்டியில் ராஜஸ்தான் அணி மோதவுள்ளது. அந்த அணியில் வீரர்கள் குறைந்துள்ள நிலையில், அணியில் உள்ள மற்ற வீரர்கள் தங்களது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

வீரர்கள் தீர்மானிக்க வேண்டும்

வீரர்கள் தீர்மானிக்க வேண்டும்

அவர்கள் அணிக்காக நிலையான ஆட்டத்தை தொடர்ந்து தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் சோப்ரா தெரிவித்துள்ளார். ஜோஸ் பட்லர் அணிக்காக அடித்து ஆட தீர்மானம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். வீரர்கள் இவ்வாறு தங்களை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் அணி சிறப்பான வெற்றிகளை அடைய முடியாது என்றும் கூறியுள்ளார்.

கட்டாயத்தில் வீரர்கள்

கட்டாயத்தில் வீரர்கள்

அந்த அணி தொடர்ந்து நெருக்கடிகளை சந்தித்துவரும் நிலையில், வீரர்கள் தங்களது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள சோப்ரா, ரியான் பராக், ராகுல் டிவாட்டியா மற்றும் ஷிவம் தூபே உள்ளிட்ட வீரர்கள் போதிய அனுபவத்தை ஐபிஎல்லில் பெற்றுள்ள நிலையில் தங்களது ஆட்டங்களை சிறப்பாக தரவேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டிரைக் ரேட்டை தொடர வேண்டும்

ஸ்டிரைக் ரேட்டை தொடர வேண்டும்

முதல் 3 போட்டிகளில் சிறப்பான ஸ்டிரைக் ரேட்டுடன் ஆடும் சஞ்சு சாம்சன் அடுத்தடுத்த போட்டிகளில் ஸ்டிரைக் ரேட்டை குறைத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இது இந்த ஆண்டு நடக்கக் கூடாது என்றும் டேவிட் மில்லரும் ரன்களை அடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Story first published: Saturday, April 24, 2021, 20:42 [IST]
Other articles published on Apr 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+