For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பதவிக்கு ஒண்ணுனா பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது.. ரோஹித் கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்த கோலி!

மும்பை : ரோஹித் சர்மாவிடம் இருந்து தன் கேப்டன் பதவியை திட்டம் போட்டு தற்காத்துக் கொண்டு இருக்கிறார் விராட் கோலி.

2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியின் கேப்டனை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

பலரும் ரோஹித் சர்மாவை கேப்டனாக்கினால் தான் சரியாக இருக்கும் என கூறி வந்தனர். இந்த நிலையில், கை நழுவிப் போக இருந்த கேப்டன் பதவியை கோலி கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். இனி ரோஹித் சர்மா கேப்டனாகவே முடியாது என்கிறார்கள். அப்படி என்ன செய்தார் கோலி?

அணிக்குள் பிளவு

அணிக்குள் பிளவு

உலகக்கோப்பை தொடரின் முடிவில் இந்திய அணிக்குள் பிளவு ஏற்பட்டு இருப்பதாக பரவலாக பேசப்பட்டது. ரோஹித் சர்மா, விராட் கோலி இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்பட்டது. அணியில் எடுக்கப்பட்ட சில முடிவுகளில் ரோஹித் சர்மாவிற்கு உடன்பாடு இல்லை எனவும் கூறப்பட்டது.

விராட் கோலி ஓய்வு

விராட் கோலி ஓய்வு

இதற்கிடையே உலகக்கோப்பை தொடருக்கு பின் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படும் என கூறப்பட்டது. அதனால், அந்த தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டனாக இருப்பார் என முதலில் முடிவு செய்யப்பட்டு இருந்தது.

அடுத்த கேப்டன் யார்?

அடுத்த கேப்டன் யார்?

கேப்டனை மாற்ற வேண்டும் என்ற குரல்களும் இதே நேரத்தில் வலுத்தது. விராட் கோலி எடுக்கும் முடிவுகள் சரியாக இல்லை. எனவே, ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி 2023 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க வேண்டும். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டால், அவரையே இந்திய அணியின் கேப்டனாக தொடர வைக்க வேண்டும் என சிலர் கூறினர்.

திடீர் மாற்றம்

திடீர் மாற்றம்

இந்த நிலையில், திடீரென தன் ஓய்வை ரத்து செய்து விட்டு, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தான் விளையாட உள்ளதாக கூறினார் கோலி. தொடர்ந்து அணித் தேர்விலும் கலந்து கொண்ட அவர், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

இனி வாய்ப்பே இல்லை

இனி வாய்ப்பே இல்லை

இனி இந்திய அணியில் ரோஹித் சர்மா கேப்டனாக வாய்ப்பே இல்லை என்றே கூறப்படுகிறது. கேப்டன் பதவி மாற்றம் பற்றிய பேச்சு வந்து விட்டதால், கோலி இனி எப்போதும் ஓய்வு பெற மாட்டார். அப்புறம் எப்படி ரோஹித் சர்மா கேப்டனாக முடியும்?

பயிற்சியாளர் தேர்வு

பயிற்சியாளர் தேர்வு

பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை மாற்றும் முயற்சிகள் ஒருபுறம் நடந்து வந்த நிலையில், தற்போது விராட் கோலி கேப்டன் பதவியை கெட்டியாக பிடித்துக் கொண்டு இருப்பதால், மீண்டும் ரவி சாஸ்திரியை பயிற்சியாளராக தேர்வு செய்ய வைத்தாலும் ஆச்சரியமில்லை.

Story first published: Monday, July 22, 2019, 15:31 [IST]
Other articles published on Jul 22, 2019
English summary
This is how Virat Kohli saved his captaincy from Rohit Sharma
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+