Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அன்று புனேவை "பூனை"யாக்கி.. இன்று ஜிம்பாப்வேயை எலியாக்கிய கெய்ல்... ஒரு பிளாஷ்பேக்!

கான்பெரா: கிறிஸ் கெய்ல் அடிக்காத வரை தப்பிச்சுக்கலாம். ஆனால் அடிக்க ஆரம்பித்து விட்டால் அவ்வளவுதான், புயல் எல்லாம் கெய்ல் முன்பு அப்பளம் போல நொறுங்கிப் போய் விடும். மனுசன், ஈவு இரக்கமே காட்டாமல் பந்து வீச்சை வெளுத்து விடுவார்.

கெய்லிடம் இன்று சிக்கிய ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்களை, புனே வாரியர்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களை நேரில் பார்த்தால், ஒய் பிளட்..சேம் பிளட் என்று ஆறுதல் கூறுவார்கள். காரணம், அன்று ஐபிஎல் போட்டியில் புனே வாரியர்ஸ் வீரர்களை வெளுத்தது போல, ஏன் அதை விட கூடுதலாகவே இன்று ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்களை பதம் பார்த்து விட்டார் கெய்ல்.

This is not the first time Gayle punishes the bowlers

2013ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி பெங்களூரில் நடந்த ஐபிஎல் போட்டியின்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரரான கெய்ல், புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக பேயாட்டம் ஆடி விட்டார்.

அதிரடியாக ஆடிய அவர், 17 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். 53 பந்துகளில் 150 ரன்களைக் குவித்தார். இந்தப் போட்டியில் 21 சிக்ஸர்களை அவர் விளாசியிருந்தார். அந்தப் போட்டிதான், இன்றைய ஜிம்பாப்வேக்கு எதிரான கெய்லின் ஆட்டத்தைப் பார்த்தபோது நினைவுக்கு வந்தது.

அதேசமயம், வழக்கமாக ஐபிஎல் போட்டிகளில்தான் அதிரடியாக ரன் குவிப்பார் கெய்ல் என்ற புகார் இருந்து வந்தது. அதை முறியடிக்கும் வகையில் இன்று மேற்கு இந்தியத் தீவுகள் அணியை மீண்டும் சர்வதேச அரங்கில் பெரிய இடத்திற்குக் கொண்டு வந்து பெருமைப்படுத்தி விட்டார் கெய்ல் என்பது குறிப்பிடத்தக்கது.

கெய்ல் ஆடிய இதர பரமபத கிரிக்கெட் போட்டிகளின் பிளாஷ்பேக் இது....

Story first published: Tuesday, February 24, 2015, 13:38 [IST]
Other articles published on Feb 24, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+