'Never Ever Give Up': ஷ்ரேயாஸ் ஐயரின் ஐபிஎல் ஆட்டமும், அஜித்தின் பஞ்ச் டயலாக்கும்!
சென்னை: 'நெவர் எவர் கிவ்-அப்', இன்று அதிகாலை சரியாக 12.01 மணி முதல் தமிழகத்தின் பெரும்பாலான இளைஞர்கள் வாயிலும், செல்போன் கீகளிலும் எதிரொலிக்கும் வார்த்தை இதுதான்.
இதற்கு காரணத்தை சொல்லி தெரிய வேண்டியது இல்லை. மேலே குறிப்பிட்ட நேரத்திற்கு வெளியான விவேகம் திரைப்பட டீசரில், அஜித் பேசும் வசனம்தான் இது.
தன்னம்பிக்கையை தூண்டும் இந்த வசனம், தன்னம்பிக்கையால் 'தல'யாக உருவான ஒரு ஆதர்ஷ நாயகனின் வாயிலிருந்து வந்ததால் எழுந்த அதிர்வு அலை இது.

இணைப்பு
இந்த வார்த்தை உலகமெங்கும் எதிரொலிக்க அரை மணி நேரத்திற்கு முன்பாகத்தான், அந்த வார்த்தையை, வாழ்க்கையில், ஒரு கிரிக்கெட் வீரர் மெய்ப்பித்து காட்டியிருந்தார் என்பதை எப்படி இணைப்பு நிகழ்வாக கருத முடியும்?

நெவர் கிவ் அப்
அந்த கிரிக்கெட் வீரர் வேறு யாருமல்ல, டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஷ்ரேயாஸ் ஐயர். 196 ரன்கள் என்ற பெரும் இலக்கை விரட்டிச் சென்ற டெல்லி அணி, 121 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்தபோதிலும், வெற்றிகரமாக வெற்றியை வசப்படுத்த உதவியது ஐயரின், அந்த அதிரடி. இதைத்தான், Never Ever GiveUp மனோபாவம் என்று கூறி சிலாகிக்கிறார்கள் ரசிகர்கள்.

மகாராஷ்டிரா வீரர்
ஷ்ரேயாஸ் ஐயர், சச்சினை உருவாக்கிய மகாராஷ்டிரா கண்டெடுத்த மற்றொரு முத்து. கடந்த பல சீசன்களாக ஐயர், டெல்லிக்காக ஆடி வருகிறார். 57 பந்துகளில் 96 ரன்களை குவித்து ஏறத்தாழ அணி சேகரித்த ரன்களில் பாதியை இவரே விளாசி அசத்தினார்.

ரி்ஸ்க் வேண்டாம்
ஷ்ரேயாஸ் ஐயர், விளாசிய 96 ரன்கள் சதத்திற்கும் மேலானது. ஏனெனில் அணிக்கு தேவைப்படும்போது இந்த ஆட்டம் வெளியானது. இதில் 15 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும் குறைந்த பந்துகளில் 96 ரன்களை விளாசியபோதிலும்கூட, அவர் ரிஸ்க்கான ஷாட்டுகளை ஆடவில்லை என்பதைத்தான், 15 பவுண்டரிகள் வெளிக்காட்டுகிறது.

வேகம், விவேகம்
ரன்னும் வேண்டும், அவுட்டும் ஆகிவிடக்கூடாது என, வீரம், விவேகம் இந்த இரண்டையும் பயன்படுத்தி ஷ்ரேயாஸ் ஐயர் ஆடிய ஆட்டத்தை Never Ever GiveUp என்று, அஜித் ரசிகர்கள் சிலாகிப்பதில் அர்த்தம் இருக்கிறது உண்மைதானே?


Click it and Unblock the Notifications