இங்கிலாந்து சொதப்பும், இந்தியா அள்ளும்: பலித்த 'கடவுளின்' வார்த்தைகள்
மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியது போன்று தான் உலகக் கோப்பை போட்டிகளில் நடந்து வருகிறது.
உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வரும் வேளையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த பிப்ரவரி மாதம் பேசிய ஒரு வீடியோ தற்போது மீண்டும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. சச்சின் தனது சுயசரிதையை வெளியிட்ட விழாவில் பேசியபோது எடுக்கப்பட்ட வீடியோவை தான் தற்போது பலரும் மீண்டும் மீண்டும் பார்த்து டெண்டுல்கரை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.
உலகக் கோப்பை தொடரின் காலிறுதிக்கு எந்தெந்த அணிகள் தகுதி பெறும் என்ற சச்சினின் கணிப்பு உண்மையாகியுள்ளது. அந்த வீடியோவில் சச்சின் கூறியிருப்பதாவது,

உலகக் கோப்பை
உலகக் கோப்பை போட்டியில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்று கூறிவிட முடியாது.

அரையிறுதி
அரையிறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் தேர்வாகும்.

இங்கிலாந்து
இங்கிலாந்தின் ஃபார்மை பார்த்தால் உலகக் கோப்பையில் அது சிறப்பாக விளையாடாது என்று நினைக்கிறேன்.

இந்தியா
உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணி அனைவரும் வியக்கும் வகையில் விளையாடும் என்று நம்புகிறேன் என்று சச்சின் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

உண்மை
சச்சின் கணித்த 4 அணிகள் தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. மேலும் அவர் நம்பியது போன்று டோணி தலைமையிலான இந்திய அணி அனைவரும் வியக்கும் வகையில் விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications