சென்னை, ராஜஸ்தானுக்கு பதிலாக 2 புதிய அணிகள்.. 3 ஸ்பான்சர்கள் ரெடி
மும்பை: 3 பெரிய நிறுவனங்கள் ஐபிஎல் தொடரில் தங்கள் பங்களிப்பை அளிக்க தயாராக உள்ளன என்று பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ஐபிஎல் ஸ்பான்சராக இருந்த பெப்சி விலகியதும், அந்த இடத்துக்கு விவோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். இதற்கான போட்டியில், மேலும் 3 நிறுவனங்களும் இருந்தன. விவோ நிறுவனம், ஸ்பான்சர்ஷிப்பை பெற்றபோதிலும், மற்ற 3 நிறுவனங்களும் வேறு வகையில் ஐபிஎல் தொடரில் இணைந்திருக்க விரும்புகின்றன என்றார்.
2 வருடங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக இந்த நிறுவனங்கள் புதிய அணிகளை துவக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல் தாக்கூர் நழுவிவிட்டார்.
Story first published: Tuesday, October 27, 2015, 14:49 [IST]
Other articles published on Oct 27, 2015


Click it and Unblock the Notifications