Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவின் தலை தப்புமா ? பரபரப்பான கட்டத்தில் நியூசி, இலங்கை டெஸ்ட் போட்டி.. 5ஆம் நாளில் த்ரில்லர்

கிறிஸ்ட்சர்ச் : நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் மீது தான் 100 கோடி கிரிக்கெட ரசிகர்களின் கண்கள் உள்ளது.

இதற்கு காரணம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி டிராவை நோக்கி சென்று கொண்டுள்ளது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற வேண்டும் என்றால் அது நியூசிலாந்து கையில் தான் உள்ளது.

நியூசிலாந்து குறைந்தது 1 போட்டியிலாவது வெல்ல வேண்டும், இல்லையேனில் டிரா செய்ய வேண்டும். மாறாக, இந்தியா அகெமதாபாத் டெஸ்ட்டில் டிரா செய்து, இலங்கை 2க்கு0 என்ற கணக்கில் நியூசிலாந்தை வென்றால், அந்த அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும்.

திரில்லர்

திரில்லர்

கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டி தற்போது கிளைமாக்சை நோக்கி சென்றுள்ளது. இந்தப் போட்டியில் தற்போது 2 அணிகளும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதால் சரியான திரில்லர் படம் பார்ப்பது போல் இந்திய ரசிகர்களுக்கு உள்ளது. டாஸ் வென்று முதலில் நியூசிலாந்து அணி பந்துவீசியது.

தடுமாறிய நியூசிலாந்து

தடுமாறிய நியூசிலாந்து

இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் குசேல் மெண்டிஸ் 87 ரன்களும், கருணரத்னே 50 ரன்களும் எடுத்தது. இதனால் அந்த அணி 355 ரன்கள் என்ற ஸ்கோரை எட்டியது. இதனை தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 188 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது டேரல் மிட்செல் சதமும், மாட் ஹென்றி 72 ரன்களும் எடுத்தனர்.

மேத்தீயூஸ் சதம்

மேத்தீயூஸ் சதம்

இதனால் நியூசிலாந்து அணி முதல் இன்னிஙசில் 373 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து 18 ரன்கள் பின்தங்கிய இலங்கை அணி 2வது இன்னிங்சில் இன்று அபாரமாக விளையாடியது. முன்னாள் கேப்டன் மேத்தீயூஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.சந்திமால் 42 ரன்களும், தனஞ்செய்ய டி சில்வா 47 ரன்களும் எடுக்க இலங்கை அணி 2வது இன்னிங்சில் 302 ரன்கள் சேர்த்தது.

வெற்றி யாருக்கு

வெற்றி யாருக்கு

இதனையடுத்து கடைசி இன்னிங்சில் 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.கான்வே 5 ரன்களில் வெளியேற, தற்போது 4வது நாள் ஆட்ட நேர முடிவில் 28 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்து நியூசிலாந்து அணி ஒள்ளது. டாம் லாத்தம் 11 ரன்களிலும், வில்லியம்சன் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தற்போது கடசி நாள் அட்டத்தில் இலங்கை வெற்றிக்கு 9 விக்கெட்டும், நியூசிலாந்து வெற்றிக்கு 257 ரன்களும் தேவைப்படுகிறது. இதனால் பரபரப்பான கட்டத்தை இந்த டெஸ்ட் எட்டியுள்ளது.

Story first published: Sunday, March 12, 2023, 14:48 [IST]
Other articles published on Mar 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+