Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொல்கத்தாவில் சச்சினுக்கு செம வரவேற்பு....!

கொல்கத்தா: சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசிப் படிக்கட்டுக்கு முந்தைய படிக்கட்டுக்கு வந்து விட்டார். கொல்கத்தாவில் தனது 199வது டெஸ்ட் போட்டியை ஆடுவதற்காக வந்து இறங்கியுள்ள அவருக்கு, ஈடன் கார்டன் மைதானத்தில் பிரமாதமான வரவேற்பு கிடைத்தது.

இந்திய கிரிக்கெட் அணி இன்று தனது பயிற்சியை ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியபோது அத்தனை பேரின் கண்களும் சச்சின் மீதுதான் நிலைத்திருந்தன.

சிறார்கள் உள்பட பலரதரப்பட்ட ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே பெருமளவில் திரண்டிருந்தனர். பலர் சச்சின் வந்தபோது மலர் தூவி மகிழ்ந்தனர்.

மெஷின் மூலம் மலர் தூவினர்

மெஷின் மூலம் மலர் தூவினர்

சச்சின் பிசி ராய் கிளப் ஹவுஸுக்கு பயிற்சிக்காக வந்தபோது அவருக்கு மெஷின் மூலம் மலர் தூவி பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

சச்சின்.. சச்சின்... சச்சின்

சச்சின்.. சச்சின்... சச்சின்

ஏராளமான சிறார்கள் சச்சின் படம் போட்ட டி சர்ட்டில் வந்திருந்தனர். அனைவரும் சச்சின் சச்சின் என்று குரல் எழுப்பியபடி இருந்தனர்.

நூற்றுக்கணக்கில் கூடிய கூட்டம்

நூற்றுக்கணக்கில் கூடிய கூட்டம்

மைதானத்தைச் சுற்றிலும் ரசிகர்கள் கூட்டமாகத்தான் இருந்தது. நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்ததால் பாதுகாப்பும் பலமாகவே இருந்தது. கிட்டத்தட்ட கோட்டை போல மாறியிரு்ந்தது ஈடன் கார்டன் மைதானத்தின் வெளிப்பகுதி. யாரும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.

புகைப்பட கண்காட்சி

புகைப்பட கண்காட்சி

சச்சின் மைதானத்திற்கு வந்தபோது அங்கு அவரது புகைப்படங்கள் இடம் பெற்ற ஒரு கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதைப் பார்த்து ரசித்தார் சச்சின்.

மெழுகுச் சிலையும்

மெழுகுச் சிலையும்

அதேபோல டிரஸ்ஸிங் அறைக்கு முன்பாக சச்சினின் மெழுகுச் சிலையும் வைக்கப்பட்டிருந்தது. பெரிய அளவில் தத்ரூபமாக இல்லாவிட்டாலும் கூட சச்சினைக் கெளரவப்படுத்துவதற்காக இந்த சிலையை வைத்திருந்தனர்.

ஈடன் கார்டனில் சச்சின் சாதனை

ஈடன் கார்டனில் சச்சின் சாதனை

ஈடன் கார்டன் மைதானத்தில் சச்சின் 13 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 12 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1358 ரன்களை எடுத்துள்ளார்.

நவம்பர் 6ல் 199வது டெஸ்ட்

நவம்பர் 6ல் 199வது டெஸ்ட்

நவம்பர் 6ம் தேதி இங்கு இந்தியாவும், மேற்கு இந்தியத் தீவுகளும் தங்களது முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுகின்றன. இது சச்சினுக்கு 199வது டெஸ்ட் போட்டியாகும்.

200வது போட்டியுடன் ஓய்வு

200வது போட்டியுடன் ஓய்வு

மும்பையில் நடைபெறவுள்ள 200வது டெஸ்ட் போட்டியுடன் சச்சின் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

பயிற்சியில் கவனம்

பயிற்சியில் கவனம்

பெரும் வரவேற்பு கிடைத்தபோதும் சச்சின் வழக்கம் போல அலட்டிக் கொள்ளாமல் பயிற்சியில் கவனம் செலுத்தினார். தனது சகாக்களோடு சேர்ந்து அவர் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டார்.

Story first published: Monday, November 4, 2013, 14:58 [IST]
Other articles published on Nov 4, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+