Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தீவிரவாதிகள் குறி..? வெஸ்ட் இண்டீசில் உச்சக் கட்ட பாதுகாப்பு

Recommended Video

IND VS WI 2019 | TEST SERIES | ரத்தாகிறது இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்..?

ஆன்டிகுவா: தீவிரவாதிகள் மிரட்டலையடுத்து, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிவரும் இந்திய அணி வீரர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய அணியானது, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டி 20 மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவற்றை வெஸ்ட் இண்டீசை காலி செய்து வென்றது.

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 22ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், இந்திய வீரர்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில், பிசிசிஐக்கு சில தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.

தூதர் தொடர்பு

தூதர் தொடர்பு

அந்த போன் கால்களை அதி உன்னிப்பாக நோட் செய்த பிசிசிஐ, வெஸ்ட் இண்டீசில் உள்ள இந்திய தூதரை தொடர்புகொண்டது. இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ஐசிசியின் கருத்து

ஐசிசியின் கருத்து

அதனை ஏற்றுக் கொண்டு, ஆன்டிகுவா அரசு, இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும், இந்த விவகாரம் குறித்து ஐசிசி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது.

கண்டு கொள்ளாது

கண்டு கொள்ளாது

அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. போட்டி நடக்கும் நாடுகளில் ஏதேனும் பிரச்னை நிகழ்ந்தால், குறிப்பாக, தீவிரவாத தாக்குதல், தீவிரவாத நடவடிக்கை தொடங்கப்பட்டால் கண்டுகொள்ளாது என்றே சொல்லலாம். இதை பல முறை ஐசிசியே அறிவித்தும் இருக்கிறது.

அந்த இ மெயில்

அந்த இ மெயில்

முன்னதாக, இந்திய அணி வீரர்கள் மீது தாக்குதல் நடத்த, தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக, தங்களுக்கு இ மெயில் வந்துள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறியது. எந்த தீவிரவாத இயக்கத்தின் பெயரும் இல்லாமல் வந்த மிரட்டல் இ மெயிலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசிக்குக்கு பாகிஸ்தான் அனுப்பி இருக்கிறது.

Story first published: Tuesday, August 20, 2019, 20:12 [IST]
Other articles published on Aug 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+