Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பைக்கு சேர்க்கலாம்னு பார்த்தா இப்படி பண்ணிட்டாரே.. ஐபிஎல் வீரரால் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்

டுபிளின் : உலகக் கோப்பை தொடர்கான இந்திய அணியில் இளம் ரத்தத்தை சேர்த்து அணியின் பலத்தை அதிகரிக்கலாம் என நினைத்த தேர்வு குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் தற்போது சோகம் ஒன்று ஏற்பட்டிருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அடியில் 20 வயதை நிரம்பிய திலக் வர்மா இடம்பெற்றிருந்தால் அந்தத் தொடரில் திலக் வர்மா அபாரமாக செயல்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

Tilak varma golden duck out made fans upset ahead of asia cup

இதனால் உலகக்கோப்பை தொடரின் திலக் வர்மாவை சேர்க்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினர். மேலும் திலக் வர்மா பயமின்றி அதிரடியாக ஆடுவதாகவும் ரசிகர்களும் பாராட்டினர். இதனால் ரவி சாஸ்திரி முதல் ஹர்பஜன் சிங் வரை பலரும் திலக் வர்மாவை உலகக் கோப்பை தொடரில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.இந்த நிலையில் அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் திலக் வர்மா கோல்டன் டக் ஆகி வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

லெஃப்ட் சைடு சென்ற பந்தை தட்டிவிட முயன்று விக்கெட் கீப்பிரிடம் திலக் வர்மா பிடிப்பட்டார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய ஆறாவது இன்னிங்சில் கோல்டன் டக் ஆன வீடர் என்ற சோகமான சாதனையை திலக் வர்மா பெற்றிருக்கிறார். இதன்மூலம் இந்திய அணி வீரர்களிலே விரைவில் கோல்டன் ஆன வீரர் என்ற பெயரும் திலக் வருமாவுக்கு கிடைத்திருக்கிறது. விராட் கோலி 107வது இன்னிங்சில் தனது முதல் கோல்டன் டக் அவுட்டை பெற்றார். தோனி 85வது இன்னிங்சிலும், ஹர்திக் பாண்டியா 71வது இன்னிங்சிலும், கௌதம் கம்பீர் 36 இன்னிங்சிலும் தங்களுடைய முதல் கோல்டன் டக்கை பெற்றார்கள்.

இதனால் திலக் வர்மாவை உலககோப்பை தொடரில் சேர்க்கலாம் என நினைத்த பலருக்கும் இது அதிர்ச்சியாக இருந்தது. எனினும் இந்த ஒரு இன்னிங்ஸை வைத்து திலக் வர்மாவின் திறமையை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று கிரிக்கெட் விமர்சகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். திலக் வர்மாவின் அதீத திறமையும் பயமே இல்லாத குணமும் இருப்பதால் அவரை கண்டிப்பாக ஆசிய மற்றும் உலகக்கோப்பை தொடரில் சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தினார்கள்.

Story first published: Saturday, August 19, 2023, 7:31 [IST]
Other articles published on Aug 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+