Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை கேப்டனாகும் திலக் வர்மா.. அரசியலை முடிவுக்கு கொண்டு வரும் அம்பானி.. பாவம் ஹர்திக்!

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக திலக் வர்மா நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்திய அணியின் துணைக் கேப்டனாக உயர்ந்துள்ள திலக் வர்மா, மும்பை அணியை வழிநடத்த இதுவே சரியான தருணம் என்று அந்த அணி நிர்வாகம் கருதுகிறது.

2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பின் மும்பை அணி ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற முடியவில்லை. இதனால் 2023 சீசனில் ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்து மும்பை அணி கேப்டனாக கொண்டு வந்தது. ஆனாலும் 3 சீசன்களாக ஹர்திக் பாண்டியாவாலும் கூட சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற முடியவில்லை.

Tilak Varma

இந்த நிலையில் மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மஹிலா ஜெயவர்தனே நீக்கப்பட்டார். அந்த இடத்தை மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளரான பொல்லார்ட் நிரப்பி இருக்கிறார். இதுதொடர்பான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. தற்போது மும்பை அணி அடுத்தக் கட்ட முடிவை எடுக்க தயாராகிவிட்டது.

மும்பை அணியில் நீடித்து வரும் வீரர்களுக்கு இடையிலான மோதலை தவிர்க்க புதிய கேப்டனை நியமிக்க முடிவு செய்துள்ளது. ஹர்திக் பாண்டியாவை மீண்டும் கேப்டனாக்கினால், பும்ரா, ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் முழு ஒத்துழைப்பு கிடைக்காது. இதனால் இளம் வீரரான திலக் வர்மாவை கேப்டனாக மும்பை அணி நிர்வாகம் தீவிரமாக உள்ளது.

திலக் வர்மா ஏற்கனவே ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோருடன் நல்ல உறவில் இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் தான் இந்திய அணிக்குள் திலக் வர்மாவை கொண்டு வந்து தொடர் வாய்ப்புகளை அளித்தவர்கள். அதேபோல் பயிற்சியாளர்கள் சொல்வதை கேட்கும் கேப்டனாகவும் திலக் வர்மா செயல்படுவார்.

அதற்கேற்ப இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக திலக் வர்மா உயர்ந்துவிட்டார். ஏற்கனவே ஆசியக் கோப்பை, ஏசியன் கேம்ஸ், நியூசிலாந்து தொடர் என்று முக்கியமான தருணங்களில் தனியாளாக நின்று இந்திய அணியை காப்பாற்றியுள்ளார். இதனால் மும்பை அணியை திலக் வர்மாவை சுற்றி கட்டமைக்க அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, October 25, 2026, 12:29 [IST]
Other articles published on Oct 25, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+