என்ன ஏமாற்று வேலை இது.. ரஹானேவை கவிழ்க்க இப்படி ஒரு திட்டமா? சர்ச்சையில் சிக்கிய ஆஸி. கேப்டன்
சிட்னி: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரஹானேவிற்கு எதிராக இன்று ஆஸ்திரேலிய அணி டிஆர்எஸ் கேட்ட விதம் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. தற்போது நடந்து வரும் மூன்றாவது டெஸ்டில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 337 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 96 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 5, புஜாரா 9 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

மோசம்
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரஹானேவிற்கு எதிராக இன்று ஆஸ்திரேலிய அணி டிஆர்எஸ் கேட்ட விதம் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. அதன்படி ரஹானே பேட்டிங் செய்த போது 40வது ஓவரை வீச ஆஸ்திரேலியாவின் லைன் களத்திற்கு வந்தார். இவரின் பந்தில் ரஹானே எல்பிடபிள்யூ ஆனது போல இருந்தது.

கொடுக்கவில்லை
ஆனால் இதற்கு நடுவர் விக்கெட் கொடுக்கவில்லை. இதையடுத்து டிஆர்எஸ் கேட்பதற்கான கவுண்டவுன் தொடங்கியது. நீண்ட நேரம் யோசித்த ஆஸி கேப்டன் டிம் பெயின் கவுண்டவுன் முடிந்த பின் டிஆர்எஸ் கேட்டார். ஆனால் இவர் கவுண்டவுன் முடியும் நேரத்தில் கேட்டதாக டிஆர்எஸ் கேட்டதாக கூறி அந்த டிஆர்எஸ் அனுமதிக்கப்பட்டது.

ரிப்ளே
ஆனால் பெரிய திரையில் காட்டப்பட்ட ரிப்ளேவில் கேப்டன் டிம் பெயின் கவுண்டவுன் முடிந்த பின்தான் டிஆர்எஸ் கேட்டார் என்பது உறுதியானது. ஆனாலும் மூன்றாவது நடுவர் இதை ஏற்றுக்கொண்டது பெரிய சர்ச்சையானது. ரஹானே விக்கெட்டை எப்படியாவது எடுக்க வேண்டும் என்பதற்காக இப்படி கவுண்டவுன் முடிந்த பின்பு கூட கேப்டன் டிம் பெயின் டிஆர்எஸ் கேட்டது சர்ச்சையாகி உள்ளது.

இல்லை
இந்த நிலையில் டிஆர்எஸ்ஸில் ரஹானே விக்கெட் இல்லை என்று உறுதியானது. பந்து ஸ்டம்ப்பை நோக்கி ஸ் செல்லவில்லை, ஸ்டம்ப்பை விட்டு விலகி சென்றது உறுதி செய்யப்பட்டது. இதனால் ரஹானேவிற்கு விக்கெட் கொடுக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications