Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

TNPL 2021: நெல்லை - திருச்சி இன்று பலப்பரீட்சை.. போட்டியை தாண்டி இருக்கும் மற்றொரு பெரும் பிரச்னை!

சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 3வது லீக் போட்டிகள் இன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

ஐபிஎல் லீக் போல, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் வருடம்தோறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

2016ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த தொடர் கடந்தாண்டு கொரோனா காரணமாக நடத்தப்படவில்லை. தற்போது இந்தாண்டுக்கான தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

8 அணிகள்

8 அணிகள்

இத்தொடரில், சேலம் ஸ்பார்டன்ஸ் (Salem Spartans), சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (Chepauk Super Gillies), லைக்கா கோவை கிங்ஸ் (Lyca Kovai Kings), திண்டுக்கல் டிராகன்ஸ் (Dindigul Dragons), ரூபி திருச்சி வாரியர்ஸ் (Ruby Trichy Warriors), திருப்பூர் தமிழன்ஸ் (Tiruppur Tamizhans), மதுரை பாந்தர்ஸ் (Madurai Panthers) மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் (Nellai Royal Kings) என்று எட்டு அணிகள் பங்கேற்கின்றன.

3வது லீக் போட்டி

3வது லீக் போட்டி

ஏற்கனவே 2 போட்டிகள் முடிந்துவிட்ட நிலையில் இன்று 3வது லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ் ( Nellai Royal Kings), ரூபி திருச்சி வாரியர்ஸ் ( Ruby Trichy Warriors) அணிகள் மோதுகின்றன. இன்று இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் போட்டி தொடங்குகிறது. கொரோனா அச்சம் காரணமாக, ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மழையின் குறுக்கீடு

மழையின் குறுக்கீடு

கடந்தாண்டு கொரோனா காரணமாக போட்டிகள் பாதிக்கப்பட்ட சூழலில் இந்தாண்டு மழை பாதித்து வருகிறது. இதற்கு முன்னர் நடந்த 2 லீக் போட்டிகளிலும் மழைக்குறுக்கிட்டு ஆட்டம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. அணிகள் வெற்றி பெறும் தருவாயில் இருந்த போதும், முடிவு எட்டப்படாமல் போட்டிகள் நிறுத்தப்பட்டன.

வானிலை எப்படி உள்ளது

வானிலை எப்படி உள்ளது

போட்டிகள் நடைபெறும் சென்னை நகரத்தில் கடந்த 5 நாட்களாகவே மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. அதுவும் இடி மின்னலுடன் வெளுத்து வருகிறது. வானிலை அறிக்கையின் படி இன்றும் மழையின் குறுக்கீடு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆட்டம் எந்தவித பாதிப்பும் இன்றி நடைபெற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Story first published: Wednesday, July 21, 2021, 20:30 [IST]
Other articles published on Jul 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+