
டிஎன்பிஎல் தொடர்
தமிழகத்தின் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான டிஎல்பிஎல் டி20 கிரிக்கெட், 4 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டிற்கான ( 2020) போட்டிகள் ஜூன் 10 முதல் ஜூலை 12 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்துவைக்கப்பட்டது.

இந்தாண்டு திட்டம்
இதனையடுத்து இந்தாண்டு தொடருக்கான அட்டவணை கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் ஜூன் 4 டிஎன்பிஎல் தொடரை தொடங்கி ஜூலை 4 வரை போட்டிகளை நடத்தப்படும் என கூறப்பட்டது. மே.7ம் தேதி ஏலம் நடைபெறும் எனவும் கூறப்பட்டது. திருநெல்வேலி, திண்டுக்கல், சேலம், கோவை நகரங்களில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சேலம், கோவை மைதாங்களில் முதல் முறையாக டி.என்.பி.எல் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

போட்டிகள் ஒத்திவைப்பு
இந்நிலையில் கொரோனா காரணமாக இந்தாண்டுக்கான தொடரையும் ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎல் கவுன்சில் அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய டிஎன்பிஎல் தலைமை செயல் அதிகாரி பிரசன்ன கண்ணன், தமிழகத்தில் தற்போது ஊரடங்கு போடப்பட்டுள்ளது. எனவே தளர்வுகள் அறிவிக்கப்படுகிறதோ அப்போதுதான் டிஎன்பிஎல் போட்டி நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும்.

ஆலோசனை
நாங்கள் தமிழகத்தில் உள்ள நிலைமையை கண்காணித்து வருகிறோம். மாநில அரசுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி, அதன்பிறகு போட்டிகளை நடத்துவது குறித்து முடிவெடுப்போம். எங்களால் எப்போது ஊரடங்கு தளர்வுகள் கிடைக்கும் கூற முடியாது. எனவே அது தெரிந்தவுடன் அடுத்த போட்டி அட்டவணை விவரங்களை வெளியிடுவோம்.


Click it and Unblock the Notifications











