Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாருமே எதிர்பார்க்காத திருப்பம்.. பாதியில் குறுக்கிட்டு நாசமாக்கிய மழை.. வீணான சென்னையின் ஆக்ரோஷம்!

சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 2வது போட்டியிலும் மழைக்குறுக்கிட்டு நாசம் செய்துள்ளது.

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டி தொடர் நேற்று தொடங்கியது.

முதல் போட்டி மழையினால் கைவிடப்பட்ட நிலையில் இன்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள் மோதின.

2வது போட்டி

2வது போட்டி

இந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. யாரும் எதிர்பார்க்காத மோசமான ஆட்டத்தை திருப்பூர் அணி வெளிப்படுத்தியது. தொடக்க வீரர்கள் தினேஷ் டக் அவுட்டும், சித்தார்த் ஒரு ரன்னுக்கும் வெளியேறினர்.

படு மோசம்

படு மோசம்

இதன் பின்னர் களமிறங்கிய துஷர் ராஹேஜா 6 ரன்களுக்கும் அரவிந்த் 7 ரன்களுக்கும், ஃப்ரான்சிஸ் டக் அவுட்டும் ஆகி அடுத்தடுத்து வெளியேறினர். யாரேனும் ஒரு வீரராவது சிறப்பாக விளையாடி அணியை மீட்பார்கள் என எதிர்பார்த்த சூழலில் அனைத்தும் பொய்யானது. அணியின் பேட்டிங் வரிசையில் 7 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு அவுட்டாகினர். இதில் 3 பேர் டக் அவுட்டாகும். 16.2 ஓவரின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது.

கைவிடப்பட்ட ஆட்டம்

கைவிடப்பட்ட ஆட்டம்

சென்னையில் கடந்த 5 நாட்களாகவே மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. அதுவும் இடி மின்னலுடன் வெளுத்து வருகிறது. அதன் நீட்சியாக இன்று மழை மீண்டும் ஆட்டத்தைப் போட, அருமையான மேட்ச் ஒன்று வீணாய் போனது. அதன்பிறகு கடைசி வரை போட்டியை தொடங்கவே முடியவில்லை. இதனால், முடிவு ஏதுமின்றி ஆட்டம் கைவிடப்பட்டது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

நாளை (ஜுலை.21) நடக்கும் ஆட்டத்தில், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதுகின்றன. அதே சேப்பாக் ஸ்டேடியத்தில் இந்த போட்டியும் நடைபெறுகிறது. நாளையும் மழை பெய்து ஆட்டத்தை நாசம் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Story first published: Tuesday, July 20, 2021, 23:21 [IST]
Other articles published on Jul 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+