Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

TNPL: அடுத்தடுத்த விக்கெட்டுகள்.. படு மோசமாக சொதப்பிய நெல்லை அணி.. ரூபி திருச்சி வாரியர்ஸ் அபார வெற்றி

சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 3வது லீக் போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டி தொடர் கடந்த 19ம் தேதியன்று தொடங்கியது.

முதல் 2 போட்டிகள் மழையினால் கைவிடப்பட்ட நிலையில் நேற்று நடைபெற்ற 3வது லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின.

3வது போட்டி

3வது போட்டி

இந்த போட்டியில் டாஸ் வென்ற நெல்லை அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. திருச்சி அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர் அமித் சாத்விக் நிதானமாக விளையாடினார். மறுமுனையில் முகுந்த் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த ஓவரிலேயே நிதிஷ் ராஜகோபாலும் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

டார்கெட்

டார்கெட்

15 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகள் சரிந்து திருச்சி அணி தடுமாறிய போது அமித் சாத்விக் - ஆதித்ய கணேஷ் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை மீட்டனர். தொடக்கத்தில் நிதானம் காட்டிய அமித் சாத்விக் பின்னர் அதிரடி காட்டி 52 பந்துகளில் 71 ரன்களை விளாசி அவுட்டானார். இதில் 6 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும். பிறகு வந்த அந்தோனி தாஸ், கடைசி சில ஓவர்களில் 20 பந்துகளில் 35 ரன்களை அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன் மூலம் திருச்சி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்தது.

Recommended Video

TNPL commentaryல் Suresh Raina ஜாதி பெருமை! வெடித்த சர்ச்சை | Oneindia Tamil
தொடக்கமே அதிர்ச்சி

தொடக்கமே அதிர்ச்சி

152 என்ற இலக்குடன் களமிறங்கிய நெல்லை அணியில் தொடக்கமே பெரும் சரிவுடன் தான் இருந்தது. ஓப்பனிங் வீரர்கள் ஸ்ரீ நிரஞ்சன் 4 ரன்களுக்கும், சூர்யபிரகாஷ் 4 ரன்களுக்கும் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். பின்னர் வரும் வீரர்களாவது நிதானமாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாபா அப்பரஜித் 2 ரன்களுக்கும், ப்ரதோஷ், மோகன் அபினவ் ஆகியோர் டக் அவுட்டாகியும் வெளியேறினர்.

அசத்தல் வெற்றி

அசத்தல் வெற்றி

இதனால் நெல்லை அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியான சுழலில் விக்கெட் கீப்பர் பாபா இந்திரஜித் மற்றும் சஞ்சய் யாதவ் ஆகியோர் நம்பிக்கை தரும் வகையில் விளையாடினர். எனினும் அவர்களின் பார்ட்னர்ஷிப் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இந்திரஜித் 32 ரன்களும், சஞ்சய் 28 ரன்களும் எடுத்து வெளியேறினர். இதனால் 13.4 ஓவர்களில் 77 ரன்களுக்கு நெல்லை அணி ஆட்டமிழந்தது.

Story first published: Thursday, July 22, 2021, 12:38 [IST]
Other articles published on Jul 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+