For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

TNPL 2021: இன்று தகுதிச் சுற்று போட்டி.. மல்லுக்கட்டும் "மலைக்கோட்டை vs கோட்டை" - செம மேட்ச் ரெடி!

சென்னை: டிஎன்பிஎல் தொடரின் முதலாவது தகுதி சுற்றுப் போட்டி இன்று (ஆக.10) நடைபெற உள்ளது. இதில் 2 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருச்சி வாரியர்ஸை எதிர்கொள்கிறது.

ஐபிஎல் லீக் போல, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் வருடம்தோறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 2016ல் தொடங்கப்பட்ட டிஎன்பிஎல் தொடரில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2 முறை கோப்பையை கைப்பற்றி உள்ளது. டூட்டி பேட்ரியாட்ஸ் (2016), மதுரை பாந்தர்ஸ் (2018) ஆகிய அணிகள் தலா ஒரு தடவை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.

இந்த வருடமும் ஜூன் மாதம் டிஎன்பிஎல் தொடர் நடைபெறவிருந்தது. ஆனால் மீண்டும் கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போனது. இந்தநிலையில், டிஎன்பிஎல் தொடர் கடந்த ஜூன் 19ம் தேதி தொடங்கியது.

 8 அணிகள்

8 அணிகள்

இத்தொடரில், சேலம் ஸ்பார்டன்ஸ் (Salem Spartans), சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (Chepauk Super Gillies), லைக்கா கோவை கிங்ஸ் (Lyca Kovai Kings), திண்டுக்கல் டிராகன்ஸ் (Dindigul Dragons), ரூபி திருச்சி வாரியர்ஸ் (Ruby Trichy Warriors), திருப்பூர் தமிழன்ஸ் (Tiruppur Tamizhans), மதுரை பாந்தர்ஸ் (Madurai Panthers) மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் (Nellai Royal Kings) என்று எட்டு அணிகள் பங்கேற்றன.

 பிளே ஆஃப்

பிளே ஆஃப்

விறுவிறுப்பான நடைபெற் இத்தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், லீக் சுற்று முடிவில் திருச்சி வாரியர்ஸ் 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2-வது இடத்தையும், திண்டுக்கல் டிராகன்ஸ் 3-வது இடத்தையும், கோவை கிங்ஸ் 7 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தையும் பிடித்து 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின. கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் சம அளவிலான புள்ளிகள் பெற்றாலும், ரன்ரேட் அடிப்படையில் கோவை கிங்ஸ் அணி பிளே-ஆஃப்-க்கு முன்னேறியது. கோவை அணி -0.088 ரன் ரேட்டும், நெல்லை அணி -0.485 ரன் ரேட்டும் பெற்றிருந்தன. இதனால், நெல்லை அணி லக் இல்லாமல் வெளியேறியது. மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள் தலா 5 புள்ளிகள் பெற்று முறையே 6-வது, 7-வது, 8-வது இடங்களை பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து வெளியேறின. (பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்).

 அட்டாக் மோட்

அட்டாக் மோட்

இந்த நிலையில் முதலாவது தகுதி சுற்று போட்டி இன்று (ஆக.10) நடைபெற உள்ளது. இதில் 2 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருச்சி வாரியர்ஸை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். தோல்வி அடையும் அணி நாளை நடைபெறும் Eliminator போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - கோவை கிங்ஸ் அணிகள் இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் மோதும். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் டாப் ஸ்டாராக விளங்குபவர் என். ஜெகதீசன் (211 ரன்கள்). சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரேயொரு போட்டி தவிர்த்து வாய்ப்பு கிடைக்காமல் உட்கார்ந்திருக்கும் அதே ஜெகதீசன் தான். அதுமட்டுமின்றி, கேப்டன் கவுசிக் காந்தி, சசிதேவ், ஆல்-ரவுண்டர் ஆர்.சதீஷ் ஆகியோரும் அணியின் பலமாக விளங்குகின்றனர். பவுலிங்கில் சாய் கிஷோர், எம்.சித்தார்த், ஆர்.சதீஷ், ஆகியோர் அட்டாக் மோடில் இருக்கின்றனர்.

 லீக் சுற்று தோல்வி

லீக் சுற்று தோல்வி

அதேசமயம், முதல்முறையாக 'பிளே-ஆஃப்' சுற்றுக்குள் காலடி எடுத்து வைக்கும் திருச்சி வாரியர்ஸ் அணியில் நிதிஷ் ராஜ கோபால் (225 ரன்கள்) நல்ல ஃபார்மில் இருக்கிறார். தவிர ஆதித்யா கணேஷ், அமித் சாத்விக், அந்தோணிதாஸ் அணிக்கு பலம் சேர்க்கின்றனர். இங்கு ஹைலைட் என்னவெனில், கடைசி லீக் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தி இருந்தது. இதனால், நம்பிக்கையுடன் திருச்சி அணி களமிறங்குகிறது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. தவிர, தமிழ் மைக்கேல் தளத்தில் லைவ் ஸ்கோர் கார்டை கண்டுகளிக்கலாம்.

 வெற்றி யாருக்கு?

வெற்றி யாருக்கு?

திருச்சி வாரியர்ஸ் உத்தேச அணி: சந்தோஷ் ஷிவ், அமித் சாத்விக், நிதிஷ் ராஜகோபால், முகமது அத்னன்கான், ஆதித்யா கணேஷ், அந்தோணி தாஸ், ரஹில் ஷா (கேப்டன்), சரவணகுமார், எம்.மதிவாணன், பொய்யாமொழி, ஆகாஷ் சும்ரா. சேப்பாக் சூப்பர் உத்தேச அணி கில்லீஸ்: கவுசிக் காந்தி (கேப்டன்), என்.ஜெகதீசன், ஜெகநாத் சீனிவாஸ் அல்லது ராதாகிருஷ்ணன், எஸ்.சுஜய், சாய் கிஷோர், ஆர்.சதீஷ், சசிதேவ், ஹரிஷ் குமார், சோனு யாதவ், எம்.சித்தார்த், அலெக்சாண்டர்.

Story first published: Tuesday, August 10, 2021, 14:19 [IST]
Other articles published on Aug 10, 2021
English summary
TNPL Qualifier 1 Trichy Warriors Super Gillies - டிஎன்பிஎல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+