For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த டாப் 5 இந்திய வீரர்கள்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அனைவரும் எதிர்பார்த்து இருக்க கூடிய பிளாக்பஸ்டர் போட்டியான இந்தியா பாகிஸ்தான் மோதும் ஆட்டம் வரும் இரண்டாம் தேதி நடைபெறுகிறது. விராட் கோலி, பாபர் அஸ்ஸாமும் எப்படி விளையாட போகிறார்கள் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நேபாளத்தை 238 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி செம பார்மில் இருக்கிறது. இதனால் உலகின் நம்பர் ஒன் அணியான பாகிஸ்தானை இந்தியா சமாளிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Top 5 Run scores by Indians in asia cup odi history

இந்த நிலையில் ஆசிய கோப்பை வரலாற்றில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 வீரர்கள் குறித்து தற்போது பார்க்கலாம். இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷோயுப் மாலிக் தான். இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகளில் விளையாடியுள்ள சோயுப் மாலிக் 2 சதம் ஒரு அரை சதம் என மொத்தம் 428 ரன்களை அடித்திருக்கிறார்.

இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பிடித்திருக்கிறார். 7 போட்டிகளில் 367 ரன்களை குவித்துள்ள ரோகித் சர்மா சராசரியாக 73 ரன்கள் அடித்திருக்கிறார்.இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பாகிஸ்தான் வீரர் யூனிஸ்கான் பிடித்திருக்கிறார். அவர் இந்தியாவுக்கு எதிராக ஆசியக் கோப்பையில் 238 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 79.3 ஆகும்.

இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தை இந்திய அணியின் விராட் கோலி பிடித்திருக்கிறார். அவர் 206 ரன்களை அடித்திருக்கிறார். சராசரியாக கோலி 68.66 என்ற அளவில் வைத்திருக்கிறார். ஐந்தாம் இடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் இருக்கிறார். அவர் ஒரு அரை சதம், ஒரு சதம் என மொத்தம் 180 ரன்கள் இந்தியாவுக்கு எதிராக எதிராக ஆசிய கோப்பையில் அடித்திருக்கிறார்.

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் பந்துவீச்சை பொறுத்தவரை பாகிஸ்தான் வீரர் சையது அஜ்மல் நான்கு போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்திருக்கிறார். இந்த பட்டியலில் பும்ரா இரண்டு போட்டிகள் விளையாடி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

Story first published: Thursday, August 31, 2023, 6:10 [IST]
Other articles published on Aug 31, 2023
English summary
Top 5 Run scores by Indians in asia cup odi history ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த டாப் 5 இந்திய வீரர்கள்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+