Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் ஏலத்தில் டாப் ரேஸில் இருக்கும் வீரர்கள்.. முதல் இடம் யாருக்கு தெரியுமா?

Recommended Video

இந்த ஐ.பி.எல் சீசனில் ஏலத்தில் டாப் ரேஸில் இருக்கும் வீரர்கள்- வீடியோ

சென்னை: உலக கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய டி-20 லீக்தான் இந்த ஐபிஎல் போட்டி. உலகில் இருக்கும் முக்கிய வீரர்கள் எல்லோரும் இதில் கலந்து கொள்கிறார்கள்.

முக்கியமாக அடுத்த வருடத்தில் இருந்து ஐபிஎல் நடக்கும் சமயத்தில் வேறு எந்த கிரிக்கெட் தொடரும் நடக்காது என்று கூறப்பட்டு உள்ளது. அந்த அளவிற்கு ஐபிஎல் உலக அளவில் வைரல் ஆகி இருக்கிறது.

இந்த நிலையில் ஐபிஎல் ஏலம் வரும் 27 மற்றும் 28 தேதிகளில் பெங்களூரில் நடக்க உள்ளது. இதில் சில வீரர்களை வாங்க அனைத்து அணிகளும் முயற்சி எடுத்து வருகிறது.

குல்தீப்

குல்தீப்

சென்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்காக குல்தீப் யாதவ் விளையாடினார். இந்த முறை இவருக்கு 1.5 கோடி ரூபாய் குறைந்தபட்ச தொகை விதிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த வருடம் முழுக்க ஸ்பின் பவுலிங்கில் இவர் காட்டிய வித்தியாசமும் வேகமும்தான் இந்த எதிர்பார்ப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

2 கோடி

2 கோடி

2017 ஐபிஎல் ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ் 14.5 கோடி கொடுத்து வாங்கப்பட்டார். அப்போது ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் அணி அவரை வாங்கியது. இந்த முறை இவர் மீண்டும் ஏலத்திற்கு வருகிறார். இவருக்கு குறைந்தபட்ச தொகையே 2 கோடியாக விதிக்கப்பட்டு இருக்கிறது.

மெக்குலம்

மெக்குலம்

நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்குலம் கண்டிப்பாக சென்னை அணிக்கு திரும்ப வருவார் என்று ஆருடம் கணிக்கப்பட்டு இருக்கிறது. இவரை மீதம் இருக்கும் ரிட்டென்ஷன் வாய்ப்பை பயன்படுத்தி வாங்கு முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதே சமயத்தில் இவருக்கு குறைந்தபட்ச தொகையாக 2 கோடி விதிக்கப்பட்டு இருக்கிறது.

யுவராஜ் சிங்

யுவராஜ் சிங்

ஐபிஎல் 2014ல் பெங்களூரு அணிக்காக 14 கோடி கொடுத்து வாங்கப்பட்டார் யுவராஜ் சிங். அதற்கு அடுத்த வருடமே டெல்லி அணிக்காக 16 கோடி கொடுத்து வாங்கப்பட்டார். அதன் பின் சென்ற வருடம் சன் ரைடர்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார். ஆனால் இந்த முறை ஐபில் ரிட்டென்ஷனில் அவர் பெயர் இல்லை. ஆனாலும் அவருக்கு குறைந்தபட்ச தொகையாக 2 கோடி விதிக்கப்பட்டு இருக்கிறது.

கவுதம் கம்பீர்

கவுதம் கம்பீர்

யுவராஜ் போலவே ரிட்டென்ஷனில் கம்பீரும் இடம்பிடிக்கவில்லை. இவரை கொல்கத்தா அணி மீண்டும் எடுக்குமா என்ற சந்தேகம் நிலவி வருகிறது. ஆனாலும் அவரை தவிர சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன், கேப்டன் அந்த அணிக்கு இல்லை என்று கூறப்படுகிறது. இவருக்கு 2 கோடி மதிப்பு விதிக்கப்பட்டு இருக்கிறது.

பெங்களூர்

பெங்களூர்

பெங்களூர் அணிக்கு இன்னும் இரண்டு 2 ரிட்டென்ஷன் மீதம் இருக்கிறது. இதில் முதலில் எடுக்கப்பட இருக்கும் வீரர் கெயில் என்று கூறப்படுகிறது. 2.5 கோடி வரை இவருக்கு குறைந்த பட்ச தொகை விதிக்கப்பட்டுள்ளது. டி-20 போட்டி என்றாலே பலருக்கு கெயில் நியாபகம்தான் வரும் அதன் காரணமாகவே இவருக்கு எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

சென்னை வீரர் அஸ்வின்

சென்னை வீரர் அஸ்வின்

இந்த ரேஸில் அஸ்வின்தான் முதல் இடத்தில் இருக்கிறார். இவருக்கு 3 கோடி வரை குறைந்தபட்ச தொகை விதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவருக்காக ஒரு காலத்தில் சென்னையும், பெங்களூரும் அடித்துக் கொண்டது நினைவில் இருக்கலாம். இவரை கண்டிப்பாக சென்னை அணி எடுக்கும் என்று டோணி உறுதியளித்து இருக்கிறார்.

Story first published: Monday, January 22, 2018, 15:08 [IST]
Other articles published on Jan 22, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+