Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவிற்கு சிக்கலாக மாறியதே.. இந்த ஒரு வீரர்தான்! இந்த வீடியோவை பாருங்க புரியும்! டிரெண்டிங் மீம்

சென்னை; இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மேட்சில் இந்தியாவின் பேட்டிங் மிக மோசமாக இருந்துள்ளது. அகமதாபாத் பிட்சில் பேட்டிங் மிக கடுமையாக இருந்ததால் இந்திய அணி திணறியது. இதை வைத்து இப்போதே மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.

இதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்ற நிலையில் இந்தியா முதலில் பேட்டிங் இறங்கியது. தொடக்கத்திலேயே ரோஹித் சர்மா வேகமாக ஆடினாலும் இன்னொரு பக்கம் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கில் அவுட் ஆனார்.

 Trending meme on David Warner fielding for Australia against India in 2023 World Cup Finals?

அதேபோல் வேகமாக பவுண்டரி சிக்ஸ் என்று ஆடிக்கொண்டு இருந்த ரோஹித் சர்மா 31 பந்தில் 3 சிக்ஸ் அடித்தார். 4 பவுண்டரி அடித்தார் . 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் தேவையின்றி கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அவரை தொடர்ந்து இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் வெறும் 4 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடந்த 4 போட்டிகளில் 2 அரைசதம், 2 சதம் அடித்தார். ஆனால் இன்று முக்கியமான கட்டத்தில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவர் அவுட்டாகி உள்ளார். அதன்பின் கோலி நிதானமாக 63 பந்தில் 54 ரன்கள் எடுத்தார். கே எல் ராகுல் 107 பந்தில் 66 ரன்கள் எடுத்தார்.

இடையில் ஜடேஜாவும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். அதன்பின் பும்ராவும் வெறும் 1 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். இதனால் இந்தியாவை விட்டு மேட்ச் கொஞ்சம் கொஞ்சமாக சென்று கொண்டு இருக்கிறது . இன்று ஆஸ்திரேலிய மெயின் பவுலர்கள் எல்லோருமே கிட்டதட்ட விக்கெட் எடுத்தனர். 240 ரன்கள் எடுத்து இந்திய அணி 50 ஓவர்களுக்கு ஆல் அவுட் ஆனது.

காரணம்: இந்த மேட்சில் ஆஸ்திரேலியாவின் பீல்டர்கள் மிக சிறப்பாக ஆடினார். பீல்டர்கள் எல்லா இடங்களிலும் பிரஷர் போட்டனர் . முக்கியமாக டிராவிஸ் ஹெட் மற்றும் வார்னர் மிக சிறப்பாக பீல்டிங் செய்தனர்.

மைதானத்தில் 40 பீல்டர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லும் அளவிற்கு பீல்டர்கள் எல்லா இடங்களிலும் இருந்தனர். வார்னர் எல்லாம் எந்த பக்கம் பந்து போனாலும் அதை பிடிப்பதற்காக இருந்தார். இதை வைத்தும் நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர். வார்னர் எல்லா இடத்திலும் இருப்பதை வைத்து மீம்ஸ் வீடியோ ஒன்று வெளியிட்டு உள்ளனர்.

அணி விவரம்: இந்திய அணி மாற்றம் இல்லாமல் அதே அணியுடன் களமிறங்கி உள்ளது. ரோஹித் சர்மா, கில், விராட் கோலி , ஷ்ரேயாஸ் ஐயர் , கே எல் ராகுல் (கீப்பர்) , சூர்யகுமார் யாதவ் , ரவீந்திர ஜடேஜா , முகமது ஷமி , ஜஸ்பிரிட் பும்ரா , குல்தீப் யாதவ் , முகமது சிராஜ் ஆகியோர் களமிறங்கி உள்ளனர். அதே அணியுடன் இந்திய அணி களமிறங்கி உள்ளது. இன்று இந்திய அணியில் உலகக் கோப்பையில் முதல் சில போட்டிகளை விட வேறு எந்த போட்டியிலும் இந்திய அணி டீமை மாற்றவே இல்லை.

இன்று மேட்சில் அஸ்வின் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. சிராஜுக்கு பதிலாக அஸ்வின் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் சிராஜ் அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளார். இன்னொரு பக்கம் ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் உள்ளனர்.

Story first published: Sunday, November 19, 2023, 19:09 [IST]
Other articles published on Nov 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+