Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI: ரகிட ரகிட ரகிட.. சஞ்சு சாம்சனால் கொண்டாட்டம்.. ரசிகர்களின் வெறித்தன மீம்ஸ் இதோ!

ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸ் பார்க்கலாம்.

Trending Memes after Indian won by 200 Runs and Won the ODI Series against West Indies

நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 52 பந்துகளில் 70 ரன்கள் குவித்து அசத்தினார். கடைசி ஓவரில் மட்டும் 18 ரன்களை விளாசி மிரட்டலான ஃபினிஷிங்கை இந்திய அணிக்கு அளித்தார். இதனை அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் ஸ்பைடர் மேனை பார்த்து அயர்ன் மேன், "You're an Avenger now" என்று சொல்வார். அதனை அப்படியே மாற்றி, இந்திய கேப்டன் மற்றும் ஃபினிஷர் ரோலில் ஆடிய தோனி, ஹர்திக் பாண்டியாவை பாராட்டுவது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல் ரகம்.

Trending Memes after Indian won by 200 Runs and Won the ODI Series against West Indies

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் சஞ்சு சாம்சன் 41 பந்துகளில் 51 ரன்கள் குவித்து அசத்தினார். கடைசி 12 இன்னிங்ஸ்களில் 3 அரைசதம், 5 முறை நாட் அவுட் பேட்ஸ்மேகனாக சஞ்சு சாம்சன் இருந்துள்ளார். அதேபோல் பேட்டிங் சராசரி 55.71ஆக உள்ளது. அதனை ரிதம் படத்தில் அர்ஜுனை பார்த்து அவரின் அம்மா, உனக்கு இன்னும் கொஞ்சம் சந்தோஷம் கொடுத்திருக்கலாம் என்று சொல்லுவார். அதனை அப்படியே மாற்றி ரசிகர்கள் சாம்சனை பார்த்து, "உனக்கு இன்னும் கொஞ்சம் ஒருநாள் போட்டிகளில் சான்ஸ் கொடுத்திருக்கலாம்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் செண்டிமெண்ட்.

Trending Memes after Indian won by 200 Runs and Won the ODI Series against West Indies

அதேபோல் நேற்றைய ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்த போது முதல் 40 பந்துகளில் 36 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார். ஆனால் அடுத்த 12 பந்துகளில் 36 ரன்கள் விளாசி மிரட்டினார். இதனை முதல் 40 பந்துகளில் ஹர்திக் பாண்டியா அம்பி போல் சாந்தமாக இருந்ததாலும், கடைசி 12 பந்துகளில் அந்நியன் போல் அதிரடிக்கு மாறியது போலவும் உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.

Trending Memes after Indian won by 200 Runs and Won the ODI Series against West Indies

நேற்றைய போட்டியில் 200 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றதன் மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணியை தொடர்ச்சியாக 13வது முறையாக ஒருநாள் தொடரில் வீழ்த்தி சாதனை படைத்தது. இதனை செல்போனை உடைத்து கைகளில் கொடுக்கும் வடிவேலுவை போல், வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்திய அணி சுக்குநூறாக உடைத்ததாக உருவாக்கப்பட்ட மீம் குபீர் ரகம்.

Trending Memes after Indian won by 200 Runs and Won the ODI Series against West Indies

அதேபோல் சஞ்சு சாம்சன் களமிறங்கி எதிர்கொண்ட 2வது பந்திலேயே சிக்சர் விளாசி அதிரடியை வெளிப்படுத்தினார். அதேபோல் 41 பந்துகளில் 51 ரன்கள் விளாசியதால், ஆசியக் கோப்பைக்கு சஞ்சு சாம்சனை சேர்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனை சஞ்சு சாம்சன், "அயன்" படத்தில் வரும் வில்லனோடு ஒப்பிட்டு உருவாக்கப்பட்டுள்ள மீம் மரண மாஸ் ரகம்.

Story first published: Wednesday, August 2, 2023, 8:52 [IST]
Other articles published on Aug 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+