Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்-ன் போதே டெஸ்ட் சாம்பியன்ஷிப்காக ரோகித் - போல்ட் செய்த வேலை.. உண்மையை உடைத்த பவுலிங் கோச்!

மும்பை: ஐபிஎல் தொடரின் போதே ரோகித் சர்மா - ட்ரெண்ட் போல்ட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகாக மோதி பார்த்துள்ளனர்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18ம் தேதி தொடங்குகிறது.

இதற்காக இரு அணிகளும், 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அறிவித்து தயாராகி வருகின்றன.

ஓப்பனிங்

ஓப்பனிங்

இந்திய அணியை பொறுத்தவரை ஓப்பனிங் ஜோடியாக ரோகித் சர்மா - சுப்மன் கில் களமிறங்குவார்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ரோகித் சர்மா ஓப்பனிங் களமிறங்கினால் அவர் முதல் சில ஓவர்களுக்கு ட்ரெண்ட் போல்ட்டை எதிர்கொள்ள வேண்டும். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் மற்றும் தலைசிறந்த பவுலரான இவர்கள் ஐபிஎல் தொடர் முதலே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகாக தயாராகியுள்ளனர்.

 ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டு வரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் தான் ட்ரெண்ட் போல்ட்-ம் இடம்பெற்றுள்ளார். வலைப்பயிற்சியின் போது ரோகித் சர்மாவுக்கு எதிராக ட்ரெண்ட் போல்ட் இங்கிலாந்து களத்தில் ஓவர் வீசுவது போன்று, நன்கு ஸ்விங் செய்வார் என்று மும்பை அணி பவுலிங் பயிற்சியாளர் ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார். ரோகித் சர்மாவின் கால் பேட்களுக்கு எதிராக நிறைய பந்துகள் ஸ்விங் செய்தும், அதனை ரோகித் எதிர்கொண்டும் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

ஹெய்டன்

ஹெய்டன்

ரோகித்தின் பேட்டிங் குறித்து பேசியுள்ள ஷேன் பாண்ட், ரோகித் சர்மாவை பல சமயங்களில் நான் மேத்யூவ் ஹெய்டனாக பார்க்கிறேன். ஏனென்றால் ஹெய்டனை போன்று ரோகித் சர்மா கடினமான பிட்ச்களில் சிறப்பாக விளையாடி அணி ஸ்கோரை உயர்த்துகிறார். இங்கிலாந்து தொடரின் போது பிட்ச்- சிரமமாக இருந்த போதும் வேகமாக ரன்களை உயர்த்தினார். எனவே நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் எல்லாம் சரியாக அமைந்தால் ரோகித் சர்மா நல்ல ஸ்கோரை அடிப்பார் எனக்கூறியுள்ளார்.

ஃபார்மில் ரோகித் சர்மா

ஃபார்மில் ரோகித் சர்மா

ரோகித் சர்மா இதற்கு முன்னர் ஒரே ஒரு முறை தான் இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டி விளையாடியுள்ளார். அதே போல முதல் முறையாக இங்கிலாந்து மண்ணில் ஓப்பனிங் ஆடுகிறார். கடைசியாக இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் சிறப்பாக ஆடியதன் மூலம் ரோகித் சர்மா நல்ல ஃபார்மில் உள்ளார்.

Story first published: Tuesday, June 15, 2021, 20:56 [IST]
Other articles published on Jun 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+