Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அட அட இது என்ன அதிசயம்.. கேன் வில்லியம்சனுக்கு இனி இங்கிலாந்து பயிற்சியாளர்.. எப்படின்னு பாருங்க!

Recommended Video

WORLD CUP 2019 FINALS : NZ VS ENG | களத்திலேயே அதிர்ச்சி அடைந்த வில்லியம்சன்! ஏன் தெரியுமா?- வீடியோ

லண்டன்: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய பயிற்சியாளராக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டிரெவெர் பேலிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்து பரபரப்பு அடங்கி உள்ளது. இங்கிலாந்து அணி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை கைப்பற்றி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

இத்தனை வருட கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. இதற்கு அந்த அணியின் பயிற்சியாளர் டிரெவெர் பேலிஸ் முக்கிய காரணமாவார்.

என்ன பயிற்சி

என்ன பயிற்சி

டிரெவெர் பேலிஸ் இங்கிலாந்து அணியின் முகத்தை மாற்றிய நபர் என்று கூட கூறலாம். அணியில் இருக்கும் எல்லா வீரர்களுக்கு தனி பொறுப்பு எடுத்து அவர்களின் திறமையை வெளியே கொண்டு வந்தவர் டிரெவெர் பேலிஸ். அணியில் 4க்கும் அதிகமான ஆல் ரவுண்டர்களை உருவாக்கி அந்த இங்கிலாந்து உலகக் கோப்பை வெல்ல காரணமாக இருந்தவர்.

வரலாறு

வரலாறு

அதேபோல் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி இரண்டு முறை கோப்பை வெல்லவும் டிரெவெர் பேலிஸ் காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது இல்லாமல் சிட்னி சிக்ஸர் அணி பிக்பாஸ் லீக் போட்டியிலும், சாம்பியன்ஸ் லீக் போட்டியிலும் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

இப்போது என்ன

இப்போது என்ன

இந்த நிலையில் தற்போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய பயிற்சியாளராக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டிரெவெர் பேலிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் மீண்டும் கே கே ஆர் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று கருதப்பட்ட நிலையில் சன் ரைசர்ஸ் அணிக்கு பயிற்சியாளர் ஆகி உள்ளார்.

முக்கியம்

முக்கியம்

சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக தற்போது நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இருக்கிறார். இந்த நிலையில் கேன் வில்லியம்சனுக்கு அவரை எதிர்த்து கோப்பை வாங்கிய இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் டிரெவெர் பேலிஸ் இனி பயிற்சி அளிக்க போகிறார். இது போன்ற அதிசயம் எல்லாம் ஐபிஎல் தொடரால் மட்டும் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, July 18, 2019, 16:24 [IST]
Other articles published on Jul 18, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+