மோதுவதில் வல்லவர்
கார் விபத்தும் அதை தொடர்ந்த வழக்குகளும் பாலிவுட் நடிகர் சல்மான்கானை பின்தொடருவதால், சல்மான் ஹிட் மற்றும் ரன் என்று அணிக்கு பெயர் வைத்தால் தப்பிவிடலாம் என்று சொல்கிறார் இந்த நெட்டிசன்.
மெட்ராசுன்னு வச்சிருங்க
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வேறு எந்த பொயர் வைத்தாலும் பொருத்தமாக இருக்காது. மெட்ராஸ் சூப்பர் கிங்ஸ் என்று வைத்தால் ரசிகர்கள் ஏற்பதை தவிர வேறு வழியிருக்காது.
சித்து குறட்டை
கர்நாடக முதல்வர் சித்தராமையா, பொது மேடைகளில் தூங்கும்போது கேமராக்கள் கண்களில் சிக்கி அவ்வப்போது எதிர்க்கட்சிகள், மீடியாக்கள் விமர்சனங்களுக்கு உள்ளாகிறார். எனவே கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு பதிலாக, சித்தராமையா ஸ்லீப்பிங் லெவன் என்று பெயர் சூட்டலாமாம்.
டெல்லி அணியில் கேஜ்ரிவால்
எதெற்கெடுத்தாலும், தர்ணா நடைபெறுவதில், பெயர் வாங்கிய நகரம் தலைநகர் டெல்லி. எனவே, டெல்லி தர்ணா டெவில்ஸ் என்று பெயரை மாற்றிவிட்டால் அந்த அணி ஃபேமசான வெற்றிகளை குவித்துவிடும். யுவராஜுக்கு பதில் கேஜ்ரிவாலை அணியில் சேர்த்துவிடலாம்.
கல்வீச்சு
காஷ்மீர் மாநில தலைநகரம், ஸ்ரீநகரில் அவ்வப்போது கலவரக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்துவது வழக்கம். எனவே, ஸ்ரீநகர் ஸ்டோன் பெல்டர்ஸ் என்று அணிக்கு பெயர் வைக்கலாம் என்பது நெட்டிசன் ஒருவரின் யோசனை.
பெயரே ஒரு மார்க்கமா இருக்கே
லாகூர் பிளாஸ்டர்ஸ் என்று பெயர் வைக்கலாம். ஆனால் வாசித்தால், தப்பான அர்த்தம் வருகிறதே.. என்று ஒரு நெட்டிசன் பாகிஸ்தான் குண்டுவெடிப்புகளை ஒப்பிட்டு கிண்டல் செய்துள்ளார்.
சவுண்ட் பார்ட்டி
இந்த டிவிட் இன்னும் சமகால சிந்தனை உள்ளது. பேசாமல் அர்ணாப் (டைம்ஸ்நவ்) டெசிபல்ஸ் என்று பெயர் வைத்துவிடலாம் என்கிறார் இந்த டிவிட் போட்டவர். ஏனெனில் அர்ணாப்தான் பல டெசிபல்களுக்கு சவுண்டாக பேசக்கூடியவர்.


Click it and Unblock the Notifications











