Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோப்பையை வாங்கி தந்தவரையே இப்படி செய்யலாமா..வார்னரை அவமதித்த ஹைதராபாத் அணி?வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

துபாய்: ஐபிஎல் 2021 சீசன் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னருக்கு ஒரு மறக்க முடியாத சீசனாக மாறியுள்ளது. இந்த சீசனின் தொடக்கத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு வார்னர்தான் கேப்டனாக பொறுப்பு வகித்தார். தற்போது இவர் அணியில் கூட இடம் பெறாத சூழல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா 2ஆம் அலை காரணமாகத் தற்காலிகமாகத் தள்ளி வைக்கப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள் தற்போது ஐக்கிய அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்னும் சில லீக் போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில், பிளே ஆப் சுற்றுக்குக் கடைசி இடத்தில் முன்னேறுவதில் மும்பை, கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

டேவிட் வார்னர்

டேவிட் வார்னர்

இந்நிலையில் நேற்று இரவு நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இடையிலான போட்டியின்போது வார்னர், ரசிகர் போல் பார்வையாளர் அரங்கில் அமர்ந்து போட்டியைப் பார்த்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இந்த சீசனின் தொடக்கத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு வார்னர்தான் கேப்டனாக பொறுப்பு வகித்தார் இவர் தலைமையிலான அணி, தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்ததால், உடனே கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

சொதப்பிய வார்னர்

சொதப்பிய வார்னர்

அதன்பிறகு கேன் வில்லியம்சனுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்ட நிலையில் வார்னர் தொடர்ந்து பிளேயிங் அணியில் இடம்பெற்று வந்தார். வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகும், சன் ரைசர்ஸ் தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்தது. இந்தச் சூழலில் தான் பிளேயிங் லெவனிலிருந்தே வார்னர் நீக்கப்பட்டார். ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் மீண்டும் தொடங்கப்பட்டபோது, வார்னருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், ஒரு போட்டியில் பூஜ்ஜியம் மற்றொரு போட்டியில் இரண்டு ரன்கள் அடித்து அவுட்டாகி ரசிகர்களை வார்னர் ஏமாற்றினார். இதனால், வார்னர் அணியிலிருந்து மீண்டும் நீக்கப்பட்டு, பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.

மைதானத்தில் வார்னர்

மைதானத்தில் வார்னர்

பெஞ்சில் அமர வைக்கப் பட்ட பிறகு, வார்னர் அணியுடன் பயணம் செய்யக்கூடவில்லை விடுதியிலேயே தங்க வைக்கப்பட்டார். 18 பேர் கொண்ட அணியில் கூட அவர் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இருப்பினும், இச்சூழலிலும் தனது அணியை உற்சாகப்படுத்த அவர் தவறவில்லை. நேற்று, துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் விளையாடிய போட்டியை மைதானத்திற்கு வருகை தந்து, வார்னர் நேரில் கண்டுகளித்தார்.

ஹைதராபாத் ரசிகர்கள்

ஹைதராபாத் ரசிகர்கள்

அதோடு ஹைதராபாத் அணியின் கொடியை அவ்வப்போது வீசியும் அணிக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார். இருந்தாலும் வீரர்கள் அமர்ந்திருக்கும் டக்-அவுட் பகுதிக்கு வராமல், மைதானத்தின் அப்பர் டெக்கில் ஹைதராபாத் அணியின் சப்போட்டர்களுடன் அமர்ந்து ஆட்டத்தைப் பார்த்தார். அப்போது, பார்வையாளர்களுடன் எடுத்த செல்பியை தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

இதனால் கோபம் அடைந்துள்ள ரசிகர்கள் ஹைதராபாத் அணி நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாகவே அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளார். 2014ஆம் ஆண்டு ஐதராபாத் அணியில் சேர்ந்த பின்பு அதன் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்தார். பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் கேப்டன்ஷிப்பிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார்.

கோப்பையை வாங்கி தந்தவர்

கோப்பையை வாங்கி தந்தவர்

வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணி 2016ஆம் ஆண்டு முதன்முதலில் கோப்பையை வென்றது. சொல்லப்போனால், ஹைதராபாத் அணிக்காக விளையாடிய வார்னர் மூன்று முறை ஆரஞ்சு கேப்பை வென்றுள்ளார். இதை மேற்கோள் காட்டிய ரசிகர்கள், வார்னரை டவுட் பகுதிக்குக் கூட ஹைதராபாத் அணி நிர்வாகம் அனுமதிக்கவில்லை என விமர்சித்து வருகின்றனர்.

Story first published: Monday, October 4, 2021, 17:01 [IST]
Other articles published on Oct 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+