For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"உடனே இருவரையும் மாத்துங்க".. நள்ளிரவு பறந்த "உத்தரவு" - வேறுவழியின்றி "ம்ம்" கொட்டிய விராட் கோலி

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தோல்விக்கு பிறகு, இந்திய அணியில் மிக இரண்டு முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

சவுத்தாம்ப்டனில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

இந்நிலையில், எதிர்வரும் இங்கிலாந்து தொடருக்கு முன்பாக, இந்திய அணியின் மிக முக்கியமான மாற்றங்களை மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது.

அணியில் சிக்கல்

அணியில் சிக்கல்

இந்த முக்கிய மாற்றத்தில் புஜாரா மற்றும் ரோஹித் ஷர்மாவின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே, புஜாராவின் பேட்டிங்கில் சுத்தமாக கன்சிஸ்டன்சி இல்லை. இந்தாண்டு தொடக்கத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர், இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் என்று வரிசையாக அவரது பேட்டிங் சொதப்பி வருகிறது.

மோசமான பேட்டிங்

மோசமான பேட்டிங்

இதே நிலைமை தான் ரோஹித் ஷர்மாவுக்கும். 34 வயதான ரோஹித், டெஸ்ட் ஓப்பனராக களமிறங்க தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. அவரும் 30 ரன்கள் வரை எடுத்துவிடுகிறார். ஆனால், அதன் பிறகு அடிக்கச் சொன்னால், தலையை தொங்கப்போட்டு விடுகிறார். குறிப்பாக, இங்கிலாந்து போன்ற கடினமான ஆடுகளங்களில் அவர் நிச்சயம் அடிக்க மாட்டார் என பெட் கட்டிவிடலாம் போல. அந்தளவுக்கு ஒரு சாதாரண ரசிகனும் எளிதாக கணிக்கும் படி, அவரது பேட்டிங் மோசமாகவே இருக்கிறது.

தொடரும் ஏமாற்றம்

தொடரும் ஏமாற்றம்

எனினும், பல சீனியர் வீரர்களின் ஆதரவு ரோஹித்துக்கு இருந்தது. கவாஸ்கர் உள்ளிட்ட பலரும், ரோஹித் நின்றுவிட்டால்.. அடி தூள் தான் என்று அவரை நம்புகின்றனர். அது உண்மையும் கூட. ஆனால், அந்த 'நின்றுவிட்டால்...' என்பதில் தான் சிக்கல் ஏற்படுகிறது. நிற்க மாட்டேங்குறார். போல்ட் போன்று பந்தை ஸ்விங் செய்யும் பவுலர்களிடம் சரண்டராகிவிடுகிறார். எனினும், ரோஹித் மீதிருந்த அலாதி நம்பிக்கையின் காரணமாகத் தான் அவரை தேர்வு செய்து அனுப்பியது பிசிசிஐ.

முதல் போட்டியில் மட்டும்

முதல் போட்டியில் மட்டும்

ஆனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், ரோஹித், புஜாரா விளையாடி விதத்தில் பிசிசிஐ கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து சிறப்பு ஆலோசனை கூட்டங்களும், மும்பை - லண்டன் இடையே நடைபெற்றும் வருவதாக தெரிகிறது. அப்படி சமீபத்தில் இங்கிலாந்து நேரப்படி நள்ளிரவில் நடைபெற்ற கூட்டத்தில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. அதில், முதல் டெஸ்ட் போட்டியில், ரோஹித்தை சேர்க்கலாம் என்றும், புஜாராவுக்கும் வாய்ப்பு கொடுக்கலாம் என்று கேப்டன் கோலி தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

நோ காம்ப்ரமைஸ்

நோ காம்ப்ரமைஸ்

அனைத்தையும் பொறுமையாக கேட்ட பிசிசிஐ தரப்பில் ஒரேயொரு விஷயம் மட்டும் அழுத்தம் திருத்தமாக சொல்லப்பட்டிருக்கிறதாம். அதில், "இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், இரண்டாம் கட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே, இந்திய அணி இத்தொடரில் நிச்சயம் வென்றாக வேண்டும். ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்றாலும், இங்கிலாந்தே ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. எனவே, முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் தான் சோதனை அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். அதில், ஒழுங்காக விளையாடாத வீரர்கள் நிச்சயம் அடுத்த போட்டிகளில் விளையாட முடியாது. இது ரோஹித், புஜாரா இருவருக்கும் பொருந்தும். சீனியர் வீரர்கள் என்று எந்தவித சலுகையும் காட்ட வேண்டும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தோல்வி, இந்திய அணியின் மதிப்பை ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் குறைத்துவிட்டது. அதை மீட்க இங்கிலாந்து தொடரே ஒரே வழி. எனவே, இத்தொடரில் எந்தவித காம்ப்ரமைஸுக்கும் இடம் தர முடியாது" என்று அழுத்தம் திருத்தமாக சொல்லப்பட அப்படியே கேட்டு தலையாட்டி இருக்கிறார்களாம் கேப்டன் கோலியும், கோச் ரவி சாஸ்திரியும்.

Story first published: Thursday, July 1, 2021, 0:00 [IST]
Other articles published on Jul 1, 2021
English summary
indian senior cricketers england test series - விராட் கோலி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+