For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவுக்கு கதம்..கதம்.. இரு துருவங்கள் அணியில் இல்லை.. டி20 உலககோப்பையில் காத்திருக்கும் சவால்கள்

மும்பை : டி20 உலக கோப்பை இந்திய அணி வெல்லும் என்று கனவு கண்ட ரசிகர்களுக்கு தண்ணீர் ஊற்றி தூக்கத்தை கெடுத்தது போல் இன்று செய்தி ஒன்று வந்துள்ளது.

Recommended Video

IND vs SA T20I Series: Bumrah-வுக்கு Replacement Siraj! BCCI அறிவிப்பு

2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி ஒரு முறை கூட ஐசிசி t20 உலக கோப்பையை வென்றதில்லை. அதுவும் கடந்த முறை அரை இறுதி போட்டிக்கு கூட இந்தியாவால் தகுதி பெற முடியவில்லை.

இதனால் விராட் கோலி தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். தற்பொழுது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து ஒன்பது இருதரப்பு டி20 தொடரை வென்று அசத்தியிருக்கிறது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

ஆனால் ஆசிய கோப்பை போன்ற முக்கியமான தொடரில் கோட்டை விட்டது. பும்ரா,ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் விளையாடாததால் தான் இந்திய அணி தோற்றது என பலரும் கூறியிருந்தனர். இந்த நிலையில் டி20 உலக கோப்பை தொடரிலிருந்து பும்ரா காயம் காரணமாக விலகி இருப்பது இந்திய அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

ஜடேஜாவின் முக்கியத்துவம்

ஜடேஜாவின் முக்கியத்துவம்

ஏற்கனவே இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஜடேஜா காயம் காரணமாக டி20 உலக கோப்பை தொடரில் இருந்து விலகி இருந்தார். தற்போது இந்திய அணியின் இரண்டு இமய மலைகள் தொடரை விட்டு விலகி இருப்பது இம்முறையும் உலகக்கோப்பை கிடையாதா என்ற அளவுக்கு ரசிகர்களை ஏங்க வைத்திருக்கிறது. ஜடேஜா அணியில் இருந்திருந்தால் அணியின் சமநிலை சிறப்பாக இருந்திருக்கும்.

பும்ராவின் முக்கியத்துவம்

பும்ராவின் முக்கியத்துவம்

ஜடேஜாவின் பேட்டிங் திறனும் பந்துவீச்சு திறனும் இந்தியாவுக்கு பல யானைகளின் பலத்தை கொடுத்திருக்கும். இதேபோன்று பும்ரா ஆட்டத்தின் இறுதி கட்டத்திலும் சரி தொடக்க கட்டத்திலும் சரி நீங்கள் எப்போது அவர் கையில் பந்தை கொடுத்தாலும் இந்திய அணிக்கு சிறப்பாக பணியாற்றுவார். தற்போது இருவரும் இல்லாததால் அந்த இடத்தை எப்படி ரோகித் சர்மா நிரப்ப போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எப்படி நிரப்புவார்கள்

எப்படி நிரப்புவார்கள்

இதனால் இந்தியா மீதான எதிர்பார்ப்பு புஸ்வானம் போல் ஆகிவிட்டது. அக்சர் பட்டேல் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் ஜடேஜா போல் ஆடினால் மட்டுமே அவரிடத்தை நிரப்ப முடியும். ஆனால் பும்ரா போல் செயல்படக்கூடிய பந்துவீச்சாளர்கள் தற்சமயம் இந்திய அணியில் யாரும் இல்லை. ஒருவேளை முகமது ஷமி அல்லது முகமது சிராஜ் ஆகியோர் தங்களது திறமையை தாண்டி நல்ல பார்மில் இருந்து பந்து வீசினால் மட்டுமே பும்ராவின் இடத்தை ஓரளவுக்கு நிரப்ப முடியும்.

சமாளிக்குமா பிசிசிஐ

சமாளிக்குமா பிசிசிஐ

முக்கிய இரண்டு வீரர்கள் இந்திய அணியில் இல்லாதது அணியின் வெற்றி வாய்ப்பை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் ரோகித் சர்மாவும் , பயிற்சியாளர் ராகுல் திராவிடம் சோகத்தில் இருக்கிறார்கள். சரி இரண்டு முக்கிய வீரர்கள் இல்லை. அதனால் உலக கோப்பைக்கு வர முடியாது என்று சொல்ல முடியாது அல்லவா? இதனால் அதற்கான மாற்று வீரர்களை வைத்து சமாளிக்கும் முயற்சியை பிசிசிஐ இறங்கி உள்ளது.

Story first published: Thursday, September 29, 2022, 21:18 [IST]
Other articles published on Sep 29, 2022
English summary
Two Main pillars of Indian bowling is ruled out from t20 world cup 2022
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+