Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்படியே டிவில்லியர்ஸை பார்த்த மாதிரி இருக்கு..!! U-19 உலகக் கோப்பையில் கலக்கிய இளம் வீரர்..!!

அண்டிகுவா: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டிவில்லியர்ஸை கிரிக்கெட்டின் மெஸ்ஸி என்று ரசிகர்கள் அழைப்பது உண்டு.

Recommended Video

Baby AB in RCB Jersey! Fans Excited and pic goes Viral | IPL 2022 | OneIndia Tamil

டிவில்லியர்ஸ் மைதானத்தின் 360 டிகிரி சுற்று அளவிலும் அடிக்க கூடியவர். இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா என உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்கள் உண்டு.

அப்படிப்பட்ட டிவில்லியர்ஸ், கடந்த ஆண்டு ஐ.பி.எல். உள்பட அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

பேபி டிவில்லியர்ஸ்

பேபி டிவில்லியர்ஸ்

இதனால் கிரிக்கெட்டிலே ஒரு நிரப்ப முடியாத வெற்று இடம் ஏற்பட்டது. ஆனால் அந்த மன குறையை போக்க வந்துவிட்டார் U 19 தென்னாப்பிரிக்க வீரர் டிவால்ட் பிரவிஸ். மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் U19 உலகக் கோப்பை தொடரில் விளையாடி வரும் அவர் அப்படியே டிவில்லியர்ஸை ரசிகர்கள் கண் முன் நிறுத்தும் அளவுக்கு அதே ஷாட் ஆடுகிறார்.

பேட்டிங் பவர்ஹவுஸ்

பேட்டிங் பவர்ஹவுஸ்

இதனால் பிரவிஸை, ரசிகர்கள் பேபி டிவில்லியர்ஸ் என்று அழைக்க தொடங்கிவிட்டனர். 19 வயதிலேயே டிவில்லியர்ஸ்க்கு இருக்கும் அதே பவர், திறமை என இப்போதே கதிகலங்க வைத்துவிட்டார் பிரவிஸ். நடப்பு தொடரில் பிரவிஸ், 65 ரன்கள், 104 ரன்கள், 96 ரன்கள், 97 ரன்கள் என்று U19 தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் பவர் ஹவுசாக உள்ளார்.

ஐ.பி.எல். அணிகள்

ஐ.பி.எல். அணிகள்

இதனால் பிரவிசை, பல்வேறு ஐ.பி.எல். அணிகள் இப்போதே குறிவைக்க தொடங்கி விட்டனர். பிரவிஸ் ஐ.பி.எல். ஏலத்திற்கு தனது பெயரை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இப்போதே அவரை குறிவைத்து எடுத்தால் எதிர்காலத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்வார் என ஐ.பி.எல். அணிகள் திட்டம் போட்டுள்ளனர்.

ஆர்.சி.பி. ரசிகர்

ஆர்.சி.பி. ரசிகர்

பிரவிஸ் குடும்பமே ஐ.பி.எல். அணியின் ஆர்.சி.பி. அணியின் ரசிகர்களாம். தற்போது பிரவிஸ் பெங்களூரு அணியின் ஜெர்சியை அணிந்து ஆதரவு அளிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரவிசின் திறமையை வீணடிக்காமல் இப்போதே தென்னாப்பிரிக்க சீனியர் அணியில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Story first published: Thursday, January 27, 2022, 19:45 [IST]
Other articles published on Jan 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+