For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

U-19 இந்திய அணியில் ஒரு சச்சின்.. அதே ஜெர்சி.. பேட்டிங்கிலும் பட்டையை கிளப்பிய குட்டி சச்சின்

துபாய் : இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கிறார். இதனால் அவர் ஓய்வு பெற்ற பிறகு இவர்தான் அடுத்த சச்சின் அவர்தான் அடுத்த சச்சின் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது அண்டர் 19 கிரிக்கெட் அணியில் சச்சின் என்ற பெயர் வைத்துக் கொண்டு அவர் அணிந்த பத்தாம் நம்பர் ஜெஸ்ஸியை அணிந்து கொண்டு ஒரு கிரிக்கெட் வீரர் பட்டையைக் கிளம்பி வருகிறார் அவரைப் பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம்.

U19 Asia cup Ind vs Pak - 18 Year old cricketer sachin das with jersey number 10 attract fans

லியோ திரைப்படம் வந்த பிறகு லியோதாஸ், ஆண்டனி தாஸ், ஹெரால்ட் தாஸ் என தாஸ் என்ற பெயர் பிரபலமாகிவிட்டது. அதேபோல்தான் இந்த 18 வயது நிரம்பிய வீரரும் சச்சின் சஞ்சய் தாஸ் என்று பெயர் வைத்திருக்கிறார். சச்சினைப் போலவே பத்தாம் நம்பர் ஜெர்சி அணிந்திருக்கும் அவர் சச்சினைப் போலவே பிரமாதமாக விளையாடுகிறார்.

இன்று நடைபெற்ற 19 வயது உட்பட்டவர்களுக்கான ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறியது. 158 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறிய போது களத்திற்கு வந்த சச்சின் தாஸ், அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். கொஞ்சம் கூட பயமின்றி அதிரடியாக விளையாடிய சச்சின் தாஸ் 42 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று சிக்ஸர்களும் இரண்டு பவுண்டர்களும் அடங்கும்.

சச்சின் தாஸ் அண்டர் 19 கிரிக்கெட்டில் பட்டையை கிளப்புவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான அண்டர் 19 கிரிக்கெட்டில் சச்சின் தாஸ் 107 ரன்கள் அடித்திருக்கிறார். இதேபோன்று 19 வயது உட்பட்டவர்களுக்கான உள்ளூர் போட்டியில் இந்தியா பி மற்றும் இந்தியா ஏ அணிக்கு இடையிலான ஆட்டத்தில் களமிறங்கிய சச்சின் தாஸ் 135 ரன்கள் குவித்து இருக்கிறார்.

சச்சின் போல் பெயர் மற்றும் அல்லாமல் அவரைப் போலவே சிறுவயதிலேயே திறமையாக விளையாடி வரும் இவருக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் பாராட்டி வருகிறார்கள். லியோ தாஸ் போல் ஒரு பேட் ஆஸ்சாக கிரிக்கெட்டில் இந்த சச்சின் தாஸ் விளங்குவாரா என்பதை காலம்தான் பதில் சொல்லும்.

Story first published: Sunday, December 10, 2023, 21:33 [IST]
Other articles published on Dec 10, 2023
English summary
U19 Asia cup Ind vs Pak - 18 Year old cricketer sachin das with jersey number 10 attract fans U-19 இந்திய அணியில் ஒரு சச்சின்.. அதே ஜெர்சி.. பேட்டிங்கிலும் பட்டையை கிளப்பிய குட்டி சச்சின்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+