Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வரலாற்றிலேயே 3வது முறை..!! சாதனை மேல் சாதனை படைக்கும் U19 வீரர்.. சீனியர் அணியில் இடம் கிடைக்குமா?

கவுகாத்தி: இந்திய அண்டர் 19 கேப்டன் யாஷ் துல் , 88 ஆண்டுகால ரஞ்சி கோப்பை வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

இதன் மூலம் இந்த சாதனையை படைத்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை அவர் படைத்துள்ளார்

2022ஆம் ஆண்டின் ரஞ்சி கோப்பை தொடரில் லீக் சுற்றில் தமிழக அணியும், டெல்லி அணியும் மோதின.

முதல் இன்னிங்சில் சதம்

முதல் இன்னிங்சில் சதம்

இதில் டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து டெல்லி அணியில் அறிமுக வீரராக களமிறங்கி யாஷ் துல் சதம் விளாசினார். இதனால் முதல் இன்னிங்சில் டெல்லி அணி 452 ரன்கள் அடித்தது. இதனையடுத்து களமிறங்கிய தமிழக அணி ஷாரூக்கான் மற்றும் பாபா இந்தரஜித் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 494 ரன்கள் குவித்தது.

யாஷ் துல் சாதனை

யாஷ் துல் சாதனை

இதனையடுத்து, 2வது இன்னிங்சில் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர் யாஷ் துல், சோரே ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதனையடுத்து, யாஷ் துல் 2வது இன்னிங்சிலும் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் அறிமுக போட்டியில் இரு இன்னிங்சிலும் சதம் விளாசிய 3வது வீரர் என்ற பெருமையை யாஷ் துல் படைத்தார்.

போட்டி டிரா

போட்டி டிரா

துருவ் சோரேவும் சதம் விளாச, டெல்லி அணி 2வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 228 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஆட்டம் டிராவான போதும், முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற தமிழக அணிக்கு கூடுதல் புள்ளி வழங்கப்பட்டது. யாஷ் துல்லின் ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் மெய் சிலிர்த்து வருகின்றனர்.

அடுத்தது என்ன?

அடுத்தது என்ன?

யாஷ் துல் தொடர்ந்து ரன் குவித்தால் அவரை தேர்வுக்குழுவினர் இந்திய ஏ அணியில் விளையாட விடுவார்கள். அதிலும் ஜொலித்து, பின்னர் ஐபிஎல் தொடரிலும் ஜொலித்தால் யாஷ் துல் விரைவில் சீனியர் அணியில் இடம் பிடிக்க அனைத்து வாய்ப்பும் உள்ளது

Story first published: Sunday, February 20, 2022, 17:11 [IST]
Other articles published on Feb 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+