Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அட வீட்டுக்கே போயிட்டார்.. செம்ம ஸ்கோர் செய்த உதயநிதி.. தோனி பேன்ஸ் வாக்குகளை அள்ள பக்கா பிளான்!

கடலூர்: சிஎஸ்கே ரசிகர்கள் மற்றும் தோனி ரசிகர்களின் வாக்குகளை கவரும் வகையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முக்கியமான விசிட் ஒன்றை அடித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையில் உதயநிதி செய்த காரியம் பெரிய அளவில் வைரலாகி உள்ளது .

ஐபிஎல் தொடரின் போது பெரிய அளவில் இந்தியா முழுக்க ஒரு வீடு வைரலாகி இருந்தது. கடலூரில் உள்ள கோபி என்ற தோனி ரசிகரின் வீடுதான் அது.

தோனியின் தீவிர ரசிகரான இவர்.. தனது வீட்டில் மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் அடித்து இருந்தார். வீடு முழுக்க சிஎஸ்கே அணி வீரர்களின் படங்களை வரைந்து.. தனது வீட்டையே சிஎஸ்கே அணிக்கு அர்ப்பணித்து இருந்தார்.

வீடு பெயர்

வீடு பெயர்

தோனி ரசிகரின் வீடு என்று தனது வீட்டிற்கு பெயர் வைத்து இருந்தார். இவரின் வீட்டை சிஎஸ்கே அணி நிர்வாகமும் பாராட்டி இருந்தது. ஏன் கேப்டன் தோனியே இந்த வீட்டை பார்த்து மிரண்டு போய்.. இந்த அன்பிற்கு என்ன செய்ய போகிறேன் என்று கூறி பாராட்டி இருந்தார்.

பாராட்டு

பாராட்டு

இந்த வீடு இணையம் முழுக்க வைரலாகி இருந்தது. இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக நேற்று இரவு கோபியின் வீட்டிற்கே சென்றுவிட்டார். பிரச்சாரத்திற்காக கடலூர் வழியே சென்ற உதயநிதி செல்லும் வழியில் கோபியின் வீட்டிற்கும் சென்றுள்ளார்.

சிஎஸ்கே

சிஎஸ்கே

சிஎஸ்கே அணியின் புகழ்பாடும் வீட்டை நேரில் பார்வையிட்டு, வீட்டு உறுப்பினர்களுடன் பேசி இருக்கிறார் உதயநிதி . எந்த ஆடம்பரமும் இன்றி அமைதியாக கோபி வீட்டிற்கு சென்று.. அவருடன் பேசி உள்ளார். அதோடு சிஎஸ்கே அணி மீது கோபி வைத்திருக்கும் அன்பையும் பாராட்டி உள்ளார்.

டிவிட்

டிவிட்

இது தொடர்பாக டிவிட் செய்துள்ள உதயநிதி.. பிரச்சாரத்திற்கு இடையே கோபியின் வீட்டிற்கு சென்றேன். சிஎஸ்கேவின் நிறமான மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டு இருந்த சுவர்கள் என்னுடைய கவனத்தை ஈர்த்தது. வீடு உரிமையாளர் கோபி மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் என்னை அன்போடு வரவேற்றனர். அவர்களுக்கு என்னுடைய நன்றிகள் என்று உதயநிதி டிவிட் செய்துள்ளார்.

வாக்குகள்

வாக்குகள்

தமிழகத்தில் தோனிக்கு பெரிய அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் இந்த கிரிக்கெட் ரசிகர்களை எல்லாம் கவரும் வகையில் உதயநிதி பிரச்சாரத்திற்கு இடையில் இந்த விசிட்டை அடித்துள்ளார். தேர்தல் நேரத்தில் உதயநிதி கொஞ்சம் ஸ்கோர் செய்து வருகிறார் என்றுதான் கூற வேண்டும். இன்னும் சில நாட்களில் தமிழக வீரர் நடராஜன் வீட்டிற்கு வேறு ஒரு அரசியல்வாதி சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

Story first published: Thursday, December 24, 2020, 11:07 [IST]
Other articles published on Dec 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+