
3வது இடத்தில் டெல்லி அணி
ஐபிஎல் 2021 தொடரில் இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று டெல்லி கேபிடல்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அந்த அணியில் முன்னாள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இந்த சீசனில் இணைந்துள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் வீரர்
கடந்த 2019 முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் கடந்த ஐபிஎல் ஏலத்தையொட்டி ராஜஸ்தான் அணியால் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து டெல்லி அணியால் அவர் ஏலத்தில் எடுக்கப்பட்டார். இந்நிலையில் அடுத்துவரும் போட்டிகளில் தான் சிறப்பாக விளையாட ஆர்வமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மிடிலில் சிறப்பான ஆட்டம்
இந்த சீசனின் முதல் இரண்டு போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஷிகர் தவானுடன் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அளித்தார். மிடில் ஆர்டரில் களமிறங்கி அவர் சிறப்பான ஆட்டத்தை அளித்தார்.
ப்ரஷர் குறைந்தது
இந்நிலையில் ஷிகர் தவானுடன் இணைந்து விளையாடியது சிறப்பான அனுபவம் என்றும் தன்னுடைய ப்ரஷர் எல்லாம் விலகியதாகவும் அவர் கூறியுள்ளார். தவான் சிறப்பாக விளையாடியதாகவும் அவர் மேலும் கூறினார். அடுத்ததாக ஐபிஎல் கோப்பையை அணிக்காக கைப்பற்றுவதே தனது இலக்கு என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications