For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"நிஜமாவா".. உலகமே லைவில் மேட்ச் பார்க்க.. KKR வீரருடன் சரளமாக தமிழில் பேசிய ஐபிஎல் "அம்பயர்"

துபாய்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயருடன், அம்பயர் தமிழில் உரையாடியது மைக்கில் பதிவானது.

ஐபிஎல் 2021 தொடரில், இன்று (அக்.1) நடைபெற்று வரும் ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மல்லுக்கட்டி வருகின்றன.

இதில், டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 165 ரன்கள் எடுத்தது. தற்போது பஞ்சாப் விளையாடி வருகிறது.

 பறக்கவிட்ட வெங்கடேஷ்

பறக்கவிட்ட வெங்கடேஷ்

இதில், ஷுப்மன் கில் சிறப்பாக ஆட்டத்தை தொடங்கினாலும், முடியவில்லை. 7 ரன்களில் அர்ஷ்தீப் பந்தில் ஸ்டெம்ப்புகள் தெறிக்க போல்டானார். பிறகு வெங்கடேஷ் ஐயருடன் திரிபாதி ஜோடி சேர்ந்தார். இருவரும் மிக மிக நேர்த்தியாக அருமையான பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தனர். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த வெங்கடேஷ் ஐயர், 49 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில், 9 பவுண்டரிகளும் 1 சிக்ஸரும் அடங்கும். ராகுல் திரிபாதி 26 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து கேட்ச்சானார். கேப்டன் இயன் மோர்கன் வழக்கம் ஸ்டேடியத்திற்குள் வந்து சுற்றிப்பார்த்துவிட்டு, ஷமி ஓவரில் 2 ரன்களில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.

 166 ரன்கள் இலக்கு

166 ரன்கள் இலக்கு

இறுதிக் கட்டத்தில், பெரிய ஹிட்டர்கள் இல்லாததால், கொல்கத்தா அணியால் ரன்கள் பெரிதாக குவிக்க முடியவில்லை. தினேஷ் கார்த்திக் 11 ரன்களில் போல்டானார். இதனால், கொல்கத்தா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் சார்பில் அர்ஷ்தீப் சிங், 4 ஓவர்கள் வீசி 32 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரவி பிஷ்னாய் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

 தமிழில் பேசிய அம்பயர்

தமிழில் பேசிய அம்பயர்

இப்போட்டியில், கொல்கத்தா பேட்டிங் செய்த போது, பஞ்சாப் அணியின் எல்லிஸ் வெங்கடேஷ் ஐயருக்கு பந்து வீசினார். அப்போது வெங்கடேஷுக்கு எல்லிஸ் வைட் யார்க்கர் பந்து ஒன்றை வீசினார். அப்போது, பந்து பேட்டில் பட்டதா இல்லையா என்று பஞ்சாப் கேப்டன் ராகுல், பிட்ச் அம்பயர் அனந்த பத்மநாபனிடம் கேட்டார். அப்போது, பவுலிங் எண்டுக்கு ரன் ஓடிய, வெங்கடேஷ் ஐயர், அம்பயர் அனந்த பத்மநாபனிடம் "நிஜமாவா" என்று தமிழில் பேச அதற்கு அம்பயரும் தமிழில் பதிலளித்த சம்பவம் மைக்கில் பதிவானது.

 ரசிகர்கள் எண்ணிக்கை

ரசிகர்கள் எண்ணிக்கை

அம்பயர் அனந்த பத்மநாபன் கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும், அவருக்கு நன்றாகவே தமிழ் தெரியும். தீவிர ரஜினிகாந்த் ரசிகரான வெங்கடேஷ் ஐயர், இந்த ஐபிஎல் தொடரில் தான் அறிமுகமானார் என்றாலும், சர்வதேச பவுலர்களையும் விட்டு விளாசி வருகிறார். இன்றைய போட்டியிலும் 49 பந்துகளில் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மத்திய பிரதேச அணிக்காக விளையாடுபவராக இருந்தாலும், பூர்விகம் தமிழ் என்பதால், போட்டியின் போது கூட, ஆங்கிலத்திலோ, ஹிந்தியிலோ பேசாமல் தமிழில் பேசும் வெங்கடேஷ் ஐயருக்கு நாளுக்கு நாள் தமிழகத்தில் ரசிகர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது.

Story first published: Friday, October 1, 2021, 22:38 [IST]
Other articles published on Oct 1, 2021
English summary
umpire and venkatesh conversation in tamil - வெங்கடேஷ் ஐயர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+