For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரஞ்சி கிரிக்கெட் போட்டி... திண்டுக்கல் மைதானத்தில் பந்து தாக்கியதால் மயங்கி விழுந்த ஆஸி. நடுவர்

By Mathi

திண்டுக்கல்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பந்து தாக்கியதில் ஆஸ்திரேலிய நாட்டு நடுவர் ஜான்வாட் மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். அவருக்கு திண்டுக்கல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி சுற்றுப் போட்டிகள் இன்று நாடு முழுவதும் பல மைதானங்களில் நடைபெறுகின்றன. இதில் தமிழகம்- பஞ்சாப் இடையேயான கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அருகே நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.

இன்றைய போட்டியில் தமிழக வீரர் சந்திரசேகர் வீசிய பந்தை பஞ்சாப் வீரர் பல்விந்தர்சிங் அடித்தார். அந்த பந்து நடுவராக இருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜான்வாட்டை தாக்கியது. இதில் மயக்கம் அடைந்த ஜான்வாட் மைதானத்திலேயே விழுந்தார்.

பின்னர் அவர் திண்டுக்கல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Story first published: Tuesday, December 1, 2015, 17:41 [IST]
Other articles published on Dec 1, 2015
English summary
Umpire got hurt in TN Ranji Trophy which was held in Dindigul on Tuesday.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+