Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடேங்கப்பா.. இது மாதிரி வேகத்தை பார்த்தது இல்ல.. பயிற்சியின் போது உம்ரான் மாலிக் உலக சாதனை

டெல்லி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்காக இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

சாதாரண பயிற்சி முகாமில் என்ன நடந்து விட போகிறது. மிஞ்சி போனால் ஏதாவது ஒரு பேட்ஸ்மேன் பெரிய ஷாட்களை ஆடி பயிற்சி எடுப்பார்.

பந்துவீச்சாளர் பந்து வீசுவார். பயிற்சியின் போது வீரர்கள் பேசி சிரித்து கொள்வார்கள். இதை தானே நாம் பார்த்து இருக்கிறோம்.

பயிற்சி முகாம்

பயிற்சி முகாம்

ஆனால் காஷ்மீரை சேர்ந்த உம்ரான் மாலிக், சாதாரண பயிற்சி முகாமையே பேசு பொருளாக மாற்றிவிட்டார். அதற்கு காரணம், உம்ரான் மாலிக்கின் அதிவேக பந்துவீச்சு தான். பயிற்சியில் எப்படி பந்துவீசிகிறோம் என்பதை பொறுத்து தான் போட்டியிலும் பந்துவீசுவோம். ஆனால் உம்ரான் மாலின் வீசிய பந்து, ரெக்கார்ட் புக்கில் இடம்பெற கூடியவை.

ஆச்சரியம்

ஆச்சரியம்

நேற்று உம்ரான் மாலிக் எப்போதும் போல் சாதாரணமாக பந்துவீசி கொண்டு இருந்தார். அப்போது பயிற்சி முகாமில் சலசலப்பு எற்பட்டது. இந்திய அணி நிர்வாகிகள், பயிற்சியாளர்கள், அவர்களுக்குள்ளே பேசி கொண்டும், பந்துவீச்சு வேகத்தை அளவிடும் Speed Gun பின் நின்று ஆச்சரியமாக பார்த்து கொண்ட இருந்தனர்.

163.7 கி.மீ வேகத்தில் பந்துவீச்சு

163.7 கி.மீ வேகத்தில் பந்துவீச்சு

அப்போது தான் தெரிந்தது, உம்ரான் மாலிக் வீசிய பந்து 163.7 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசி இருக்கிறார் என்று. இது பாகிஸ்தான் ஜாம்பவான் சோயிப் அக்தர் வீசிய 161 கிலோ மீட்டர் வேகத்தை விட அதிகமாகும். இது பயிற்சி என்பதால், ரெக்கார்ட் புத்தகத்தில் அதிகாரப்பூர்வமாக இடம்பெறாது. ஆனால், வீடியோ ஆதாரத்துடன் கின்னஸ்-க்கு கூட அனுப்பினால், அவர்கள் ஆராய்ந்து முடிவு எடுப்பார்கள்.

சொன்னதை செய்த உம்ரான்

சொன்னதை செய்த உம்ரான்

ஐபிஎல் தொடரில் ஏற்கனவே 157 கிலோ மீட்டர் வேகத்தில் உம்ரான் மாலிக் பந்துவீசி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் தொடர்ந்து 14 போட்டியிலும் அதிவேகமாக பந்துவீசியதற்காக தனி விருதையும் வாங்கி இருக்கிறார். அப்போதே இறைவன் நாடினால் 160 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசுவேன் என்று உம்ரான் மாலிக் கூறியிருந்தார். தற்போது பயிற்சியில் அது சாத்தியமாகி விட்டது.

Story first published: Wednesday, June 8, 2022, 12:44 [IST]
Other articles published on Jun 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+