Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தந்தைக்கு காரை பரிசளித்த உம்ரான் மாலிக் காஷ்மீருக்கு திரும்பிய உம்ரான் மாலிக்கிற்கு உற்சாக வரவேற்பு

காஷ்மீர்: ஐபிஎல் தொடரில் கலக்கி இந்திய அணிக்கு தேர்வாகிய பிறகு முதல் முறையாக சொந்த ஊருக்கு திரும்பிய உம்ரான் மாலிக்கிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக பந்துவீசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார் உம்ரான் மாலிக்.

நடப்பு சீசனில் 13 போட்டியில் விளையாடியுள்ள உம்ரான் மாலிக் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

உற்சாக வரவேற்பு

உற்சாக வரவேற்பு

தொடர்ந்து 14 போட்டியில் அதிகவேகமாக பந்துவீசியதற்காக விருதுகளையும், பரிசுகளையும் உம்ரான் மாலிக் பெற்றார். இதனால் தற்போது தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியில் முதல் முறையாக உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பயோ பபுளில் இருந்து வெளியே வந்துள்ள உம்ரான் மாலிக் காஷ்மீர் சென்றுள்ளார்.

கார் பரிசளிப்பு

கார் பரிசளிப்பு

இதனையடுத்து உம்ரான் மாலிக்கிற்கு காஷ்மீர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரது நண்பர்கள் உம்ரான் மாலிக்கை கட்டி அணைத்து வாழ்த்து கூறினர். இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய உம்ரான் மாலிக்கின் தந்தை ரஷித், ஐபிஎல் தொடரில் கிடைத்த பணத்தின் மூலம் தமக்கு உம்ரான் மாலிக் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளதாக கூறினார்.

தாயின் உறுதுணை

தாயின் உறுதுணை

ஆற்றங்கரையோரம் வீடு இருப்பதால், உம்ரான் மாலிக் எப்போதும் ஆற்று படுகையில் ஓடி அடி கிரிக்கெட் விளையாடுவார். இதனால் அவர் ஜிம்முக்கு போகாமலேயே அவரது உடல் வலுப்பெற்றது. உம்ரான் மாலிக்கின் வெற்றிக்கு நான் தான் காரணம் என்று சொல்ல மாட்டேன். என்னை விட உம்ரான் மாலிக்கின் தாய் தான் உறுதுணையாக நின்றார்

தேசமே துணை நிற்கிறது

தேசமே துணை நிற்கிறது

இந்திய அணியில் உம்ரான் மாலிக் தேர்வான செய்தி அறிந்ததும், எங்கள் வீட்டு அக்கம் பக்கத்தினர் கொண்டாடினர். என் மகன் நாட்டுக்காக விளையாடுவதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். என் மகனுக்கு ஒட்டுமொத்த தேசமும் உறுதுணையாக நிற்கிறது. உம்ரான் தன்னை தானே நம்பினார். வெற்றிக்காக கடுமையாக உழைத்தார்.

Story first published: Thursday, May 26, 2022, 14:56 [IST]
Other articles published on May 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+