Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லாம் பொய்யா கோபால்.. உம்ரான் மாலிக்கின் சாதனையில் குளறுபடி.. உண்மை தெரியாமல் குழம்பும் ரசிகர்கள்!

கவுகாத்தி: இலங்கை அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய வரலாற்றிலேயே உம்ரான் மாலிக் புதிய சாதனை படைத்ததாக புகழப்பட்டு வரும் சூழலில் அதில் குளறுபடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

இரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. முதலில் ஆடிய இந்தியா 50 ஓவர்களில் 373 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய இலங்கை அணி 306 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இந்தியாவின் சார்பில் அதிகபட்சமாக விராட் கோலி 113 ரன்கள், கேப்டன் ரோகித் சர்மா 83 ரன்கள் மற்றும் சுப்மன் கில் 70 ரன்களை குவித்தனர். பேட்டிங்கில் இவர்கள் என்றால், பவுலிங்கில் உம்ரான் மாலிக் நாயகனாக திகழ்ந்தார்.

 உம்ரான் பவுலிங்

உம்ரான் பவுலிங்

பேட்டிங்கிற்கு சாதகமான கவுகாத்தி களத்தில் ஓவர்களை வீசிய அவர் 57 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். உம்ரானின் அதிவேக பவுலிங்கை சமாளிக்க முடியாமல் இலங்கை பேட்ஸ்மேன்கள் திணறியதை தெளிவாக பார்க்க முடிந்தது. இந்நிலையில் அவரின் பவுலிங் புதிய சர்ச்சை ஒன்றையும் கிளப்பியுள்ளது.

பெரும் சாதனை

பெரும் சாதனை

அதாவது நேற்றைய போட்டியில் அவர் ஒரு பந்தை 156 கிமீ வேகத்தில் வீசியதாக கூறப்பட்டது. இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேக பவுலிங் வீசியவர் என்ற பெருமையை உம்ரான் படைத்தார். ஆனால் இதில் உண்மை இல்லை என்றும், உம்ரான் மாலிக் வீசிய பந்து வேகம் குறைந்த ஒன்று தான், தேவையின்றி தவறான தகவல் பரவுவதாக ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

இந்தி ஒளிபரப்பு

இந்தி ஒளிபரப்பு

ஆட்டத்தின் 14வது ஓவரின் 4வது பந்தை ஃபுல்லர் லெந்தாக வீச, அதனை எதிரணி பேட்டர் சிங்கிள் அடித்தார். ஸ்டார் ஸ்போர்ட்ஸின் இந்தி ஒளிபரப்பில் அந்த குறிப்பிட்ட டெலிவரியின் போதே பந்தின் வேகத்தை காட்டாமல், ஓவரின் இறுதியில் 156 கிமீ என 4வது பந்தை குறிப்பிட்டு காட்டிருந்தனர். இதனை பார்த்து தான் சாதனை என ரசிகர்கள் கொண்டாடினர். ஆனால் ஆங்கில ஒளிபரப்பில் முற்றிலும் மாறுபட்டுள்ளது.

என்ன பிரச்சினை

என்ன பிரச்சினை

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஆங்கிலத்தின் அந்த பந்து வீசப்பட்ட உடனேயே கீழே வேகம் என்பதை குறிப்பிட்டு காட்டினர். அதில், அப்பந்து 145.7 கிமீ வேகத்தில் தான் வீசினார் என காட்டப்பட்டது. இதனால் உம்ரான் சாதனை படைத்தாரா? இல்லையா? என்ற குழப்பத்தில் ரசிகர்கள் ஆழ்ந்துள்ளனர். இவர் ஏற்கனவே ஐபிஎல்-ல் 157 கிமீ வேகத்தில் வீசி டி20ல் அதிவேக பவுலர் என்ற சாதனையை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, January 11, 2023, 11:18 [IST]
Other articles published on Jan 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+