Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஈஸ்ட் பெங்கால் தான் கீழே இருக்காங்க... அவங்க தான் பயப்படணும்... நாங்க இல்ல.. மார்கஸ்

வாஸ்கோ : ஐஎஸ்எல் 2020-21 சீசனின் 29வது போட்டி இன்று கோவாவின் வாஸ்கோவில் ஐதராபாத் எப்சி மற்றும் எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிரமாக உள்ளன.

இந்நிலையில் ஈஸ்ட் பெங்கால் அணி தான் ஐஎஸ்எல் புள்ளிகள் பட்டியலில் கீழே இருப்பதாகவும் அவர்கள் தான் வெற்றி குறித்து அச்சம் கொள்ள வேண்டும் என்றும் ஐதராபாத் அணியின் கோச் மானுவல் மார்கஸ் தெரிவித்துள்ளார்.

29வது போட்டி

29வது போட்டி

ஐஎஸ்எல் 2020-21 தொடர் துவங்கி 30வது போட்டியை நோக்கி நடைபெற்று வருகிறது. இன்றைய 29வது போட்டியில் வாஸ்கோவின் திலக் மைதானத்தில் ஐதராபாத் எப்சி மற்றும் எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது. 7வது இடத்தில் உள்ள ஐதராபாத் அணி 11வது இடத்தில் உள்ள ஈஸ்ட் பெங்கால் அணியுடன் மோதவுள்ளது.

ஐதராபாத் கோச் உறுதி

ஐதராபாத் கோச் உறுதி

இந்த போட்டியில் தன்னுடைய முதல் நேரடி வெற்றியை பெற இரு அணிகளும் முனைப்புடன் உள்ளன. இதையடுத்து இந்த போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வெற்றி பெறுவது குறித்து ஈஸ்ட் பெங்கால் அணி தான் கவலை கொள்ள வேண்டும் என்று ஐதராபாத் அணியின் கோச் மானுவல் மார்கஸ் கூறியுள்ளார்.

மார்கஸ் திட்டவட்டம்

மார்கஸ் திட்டவட்டம்

தாங்கள் சிறப்பாக விளையாடி வருவதால் தங்களுக்கு எந்தவிதமான நெருக்கடியும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். அந்த அணியில் வெளிநாட்டு வீரர்கள் இணையாத நிலையில் உள்ளூர் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில் வீரர்களின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக மார்கஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

வலிமையாக ஆட வேண்டும்

வலிமையாக ஆட வேண்டும்

மேலும் நார்த் ஈஸ்ட் அணி சிறப்பாக விளையாடி வருவதாகவும், அவர்கள் கோல் எதுவும் அடிக்கவில்லை என்பதற்காக தங்களின் ஆட்டத்தை மாற்றிக் கொள்ள முடியாது என்றும் அது தவறானது என்றும் மார்கஸ் மேலும் கூறினார். தொடர்ந்து தங்களது வலிமையான ஆட்டத்தை ஈஸ்ட் பெங்கால் அணிக்கு எதிராக விளையாட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

குழு செயல்பாடு சிறப்பாக உள்ளதாக பாராட்டு

குழு செயல்பாடு சிறப்பாக உள்ளதாக பாராட்டு

இந்த தொடரில் தொடர்ந்து 3 தோல்விகளை அடைந்த ஈஸ்ட் பெங்கால் அணி கடந்த ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிரான போட்டியில் கோல் அடிக்க ஒரு மணிநேரத்திற்கும் மேல் போராடியது. இந்நிலையில் அந்த அணியின் கோச் ராபி பௌலர் தன்னுடைய அணி குழுவாக விளையாடும்போது சிறப்பாக விளையாடுவதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, December 15, 2020, 17:11 [IST]
Other articles published on Dec 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+