Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

422.22 ஸ்டிரைக் ரேட்.. ஐபிஎல் தொடரில் புது சாதனை படைத்த பேட்ஸ்மேன்

புனே: ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகப்படியான ஸ்டிரைக் ரேட் வைத்து புது சாதனை படைத்துள்ளார் கிறிஸ் மோரீஸ்.

டி20 போட்டிகளில் வீரரின் பேட்டிங் சராசரியைவிட, ஸ்டிரைக் ரேட்தான் மிக முக்கியமானது. 100 பந்துகளை சந்தித்தால் எத்தனை ரன்களை இந்த வீரர் சேகரிக்க முடியும் என்பதை வைத்துதான் ஸ்டிரைக் ரேட் முடிவாகிறது.

உதாரணத்திற்கு, 10 பந்துகளை சந்தித்த ஒரு பேட்ஸ்மேன், 20 ரன்கள் விளாசினால் அவரது ஸ்டிரைக் ரேட், 200ஆக இருக்கும். 15 ரன்தான் அடித்தார் என்றால், ஸ்டிரைக் ரேட் 150 என்ற அளவில் நிர்ணயிக்கப்படும்.

டோணி டல்

டோணி டல்

எனவேதான் ஸ்டிரைக் ரேட் அதிகமாக உள்ள பேட்ஸ்மேன்கள் எதிரணிக்கு கிலி ஏற்படுத்துவர். இந்த வகையில் டோணியின் ஸ்டிரைக் ரேட் இந்த ஐபிஎல்லில் வெறும் 65 என்ற அளவில் உள்ளது. இது அந்த அணி உரிமையாளரையே எரிச்சலுக்கு உட்படுத்தியுள்ளது.

[Read This: சோனமுத்தா போச்சா..? ஐபிஎல் தொடரில் டெஸ்ட் மேட்ச் ஆடும் டோணி.. ஃபேர்வெல் கொடுக்க ரெடியாகிறது புனே]

விளாசல்

விளாசல்

ஆனால், டெல்லி பேட்ஸ்மேன் கிறிஸ் மோரீசோ டோணிக்கு நேர் எதிராக விளசி வருகிறார். புனே சூப்பர் ஜியான்ட்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் வெறும் 9 பந்துகளில் இவர் 38 ரன்களை விளாசினார். எனவே ஸ்டிரைக் ரேட் 422.22 என்ற அளவில் இருந்தது. அதாவது ஒரு பந்துக்கு 4 ரன்கள் என்ற வீதத்தில் விளாசியுள்ளார் இந்த தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்.

மோர்க்கல் சாதனை

மோர்க்கல் சாதனை

முன்னதாக சென்னை அணிக்காக ஆடிய தென் ஆப்பிரிக்க வீரர் அல்பி மோர்க்கல் 2012ல் பெங்களூர் அணிக்கு எதிராக 7 பந்துகளில் 28 ரன்கள் விளாசி, 400.00 என்ற ஸ்டிரைக் ரேட் வைத்திருந்ததுதான் ஐபிஎல் சாதனையாக இருந்தது. இப்போது சக நாட்டு மோரீஸ் இச்சாதனையை விஞ்சியுள்ளார்.

கடைசி நேரத்தில் விளாசல்

கடைசி நேரத்தில் விளாசல்

நேற்றைய போட்டியின்போது மோரீஸ் 6வது பேட்ஸ்மேனாக களம்புகுந்தார். 4 பவுண்டரிகள், 3 சிக்சர்களை இவர் விளாசி, புனே அணியை கடைசி கட்டத்தில் வாய் திறக்கவிடாமல் செய்துவிட்டார். ஆடம் ஜம்பாவின் பந்தில் பவுண்டரி அடித்து ஆரம்பித்த இவரது இன்னிங்ஸ், பென் ஸ்டோக்ஸ் பந்தில் சிக்சர் அடித்து நிறைவு பெற்றது.

Story first published: Wednesday, April 12, 2017, 16:34 [IST]
Other articles published on Apr 12, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+