For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கத்துக்குட்டியுடன் ஆடப் போகும் சாம்பியன் இந்தியா.. அண்டர்19 2020 உலகக்கோப்பை அட்டவணை வெளியீடு!

துபாய் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அண்டர் 19 உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணையை வெளியிட்டது.

முதல் சுற்றில் நான்கு பிரிவுகளாக இந்த தொடர் நடைபெற உள்ளது. இந்தியா பங்கேற்றுள்ள பிரிவில் ஜப்பான் அணி இடம் பெற்றுள்ளது.

முதன் முறையாக அண்டர் 19 உலகக்கோப்பையில் பங்கேற்க உள்ளது ஜப்பான் அணி.

உலகக்கோப்பை தொடர்

உலகக்கோப்பை தொடர்

அண்டர் 19 உலகக்கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனவரி 17 முதல் தொடங்கி நடைபெற உள்ளது. தென்னாப்பிரிக்கா தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை சந்திக்க உள்ளது.

சாம்பியன் இந்தியா

சாம்பியன் இந்தியா

கடந்த உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா, தன் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தியா குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

குரூப் ஏ அணிகள்

குரூப் ஏ அணிகள்

இந்தியா இடம் பெற்றுள்ள குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகள் - இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, ஜப்பான். இதில் இந்தியா, நியூசிலாந்து இரண்டும் வலுவான அணிகள் ஆகும்.

மற்ற குரூப் அணிகள்

மற்ற குரூப் அணிகள்

குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நைஜீரியா இடம் பெற்றுள்ளன. குரூப் சி பிரிவில் பாகிஸ்தான், வங்கதேசம், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து இடம் பிடித்துள்ளன. குரூப் டி பிரிவில் ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், கனடா இடம் பெற்றுள்ளன.

சூப்பர் லீக் சுற்று

சூப்பர் லீக் சுற்று

குரூப் பிரிவில் ஒவ்வொரு அணியும் மற்ற மூன்று அணிகளுடன் மோதும். அதில் முதல் இரண்டு இடங்கள் பெறும் அணி சூப்பர் லீக் சுற்றுக்கு முன்னேறும். மற்ற அணிகள் பிளேட் தொடருக்கு செல்லும்.

இரு தொடர்கள்

இரு தொடர்கள்

குரூப் சுற்றுக்குப் பின் இரண்டு தொடர்களாக மாறும். சூப்பர் லீக் சுற்று அணிகள் உலகக்கோப்பையை வெல்ல மோதுவார்கள். பிளேட் தொடரில் இடம் பெற்றுள்ள அணிகள், பிளேட் சாம்பியன்ஷிப் என்ற பட்டத்தை நோக்கி முன்னேறுவார்கள்.

உலகக்கோப்பை வெற்றி

உலகக்கோப்பை வெற்றி

அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் இதுவரை இந்தியா நான்கு முறை வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா மூன்று முறையும், பாகிஸ்தான் இரண்டு முறையும் வென்றுள்ளன. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் தலா ஒரு முறை அண்டர் 19 உலகக்கோப்பை வென்றுள்ளன.

சிறந்த வீரர்கள் உருவாகும் களம்

சிறந்த வீரர்கள் உருவாகும் களம்

அண்டர் 19 உலகக்கோப்பை தான் சிறந்த வீரர்களை அவர்களின் இளம் வயதிலேயே அடையாளம் காட்டும் களம். இதற்கு பல வீரர்களை நாம் உதாரணமாக கூறலாம்.

சிறந்த பேட்ஸ்மேன்கள்

சிறந்த பேட்ஸ்மேன்கள்

தற்போது உலகின் சிறந்த நான்கு பேட்ஸ்மேன்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, ஜோ ரூட் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் அண்டர் 19 உலகக்கோப்பையில் தான் முதன் முதலில் அடையாளம் காணப்பட்டார்கள். டி காக், ரபாடா, ரஷித் கான் உள்ளிட்டோரும் அண்டர் 19 அணியில் அடையாளம் காணப்பட்ட வீரர்களே.

ஏராளமான வீரர்கள்

ஏராளமான வீரர்கள்

இவர்கள் தவிர சிறந்த கிரிக்கெட் வீரர்களாக தங்கள் காலத்தில் வலம் வந்த பிரையன் லாரா, மைக்கேல் ஆதர்டன், கிரேம் ஸ்மித், ஹாஷிம் ஆம்லா, மைக்கேல் கிளார்க், யுவராஜ் சிங், சேவாக் இன்சமாம் உல் ஹக் என இந்த வரிசை நீளமானது. அதனால், இளம் வீரர்கள் உலகக்கோப்பை தொடரை முக்கியமான ஒன்றாக எடுத்துக் கொள்வார்கள். போட்டிகளிலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

Story first published: Thursday, October 24, 2019, 17:28 [IST]
Other articles published on Oct 24, 2019
English summary
Under 19 World cup 2020 schedule announced, India will face Japan in group stage
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+