Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Under 19 semi final -இந்தியாவை காப்பாற்றிய சச்சின் தாஸ்.. சச்சின் டெண்டுல்கர் போலவே அபார ஆட்டம்

ICC U19 world cup : ஐசிசி 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலக கோப்பை அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 9வது முறையாக இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. இதில் 245 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி துரத்தியது.

அப்போது பேட்டிங்கில் முன் வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அப்பாது 32 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற ஸ்கோரில் இந்திய அணி தடுமாறிய போது, களத்திற்கு வந்த சச்சின் தாஸ், கொஞ்சம் கூட பதற்றம் அடையாமல் அபாரமாக விளையாடி கேப்டன் உதய் சஹாரானுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து, அணியின் வெற்றிக்கு உதவி இருக்கிறார்கள்.

U19 world cup - who is Sachin das - brilliant innings vs south africa made him as young super star

இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்து பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த நிலையில், சச்சின் டெண்டுல்கரின் பெயர் போல் மட்டுமல்லாமல், சச்சின் போலவே அச்சமின்றி விளையாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார் இந்த சச்சின் தாஸ். 3 நாட்களுக்கு முன்பு தான் தனது 19வது பிறந்தநாளை சச்சின் தாஸ் கொண்டாடினார். இந்த தொடரில் அவர் ஏற்கனவே நேபாள் அணிக்கு எதிராக 116 ரன்கள் விளாசினார்.

சச்சின் தாஸ், அணியை காப்பாற்றுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறியது. 158 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த போது சச்சின் தாஸ், அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். கொஞ்சம் கூட பயமின்றி அதிரடியாக விளையாடிய சச்சின் தாஸ் 42 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று சிக்ஸர்களும் இரண்டு பவுண்டர்களும் அடங்கும்.

சச்சின் தாஸ் அண்டர் 19 கிரிக்கெட்டில் பட்டையை கிளப்புவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான அண்டர் 19 கிரிக்கெட்டில் சச்சின் தாஸ் 107 ரன்கள் அடித்திருக்கிறார். இதேபோன்று 19 வயது உட்பட்டவர்களுக்கான உள்ளூர் போட்டியில் இந்தியா பி மற்றும் இந்தியா ஏ அணிக்கு இடையிலான ஆட்டத்தில் களமிறங்கிய சச்சின் தாஸ் 135 ரன்கள் குவித்து இருக்கிறார்.இதனால் சச்சின் தாஸ், தன்னுடைய ஹீரோ சச்சின் போலவ பெரிய ஆளாக வருவாரா என்று ரசிகர்கள் எதிர்நோக்கி காத்து இருக்கிறார்கள். சச்சின் தாஸ் ஐபிஎல் ஏலத்தில் விலை போகவில்லை என்பது தான் சோகம்.

U19 world cup - who is Sachin das - brilliant innings vs south africa made him as young super star U 19 உலககோப்பையில் இந்தியாவை காப்பாற்றிய சச்சின் தாஸ்.. சச்சின் டெண்டுல்கர் போல் அபார ஆட்டம்

Story first published: Tuesday, February 6, 2024, 21:54 [IST]
Other articles published on Feb 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+