Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வங்கதேசத்துக்கு எதிரான தொடரை வென்றது அமெரிக்கா.. அடுத்தடுத்து 2 போட்டியில் தோற்ற புலிக்குட்டிகள்

அமெரிக்கா : டி20 உலக கோப்பை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கு தயாராகும் விதமாக பல்வேறு நாடுகள் பல இருதரப்பு டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த நிலையில் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதில் முதல் டி20 போட்டிகளில் யாருமே எதிர்பார்க்காத வகையில் அமெரிக்க அணி வெற்றி பெற்றது. எனினும் இது அதிர்ஷ்டத்தால் நிகழ்ந்ததாக இருக்கும். இன்றைய ஆட்டத்தில் வங்கதேச அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

USA vs Ban 2nd t20 - United states of america won the T20 series versus Bangladesh


ஆனால் யாருமே எதிர்பாராத ஒரு விஷயம் இன்று நடந்திருக்கிறது. ஹாஸ்டன் பகுதியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய அமெரிக்க அணியில் தொடக்க வீரர்கள் ஸ்டீவன் டைலர் 31 ரன்களும், மோனான்க் பட்டேல் 42 ரன்கள் எடுக்க ஆண்ட்ரீஸ் கோஸ் வெளியேறினார்.

எனினும் நடுவரிசையில் விளையாடிய ஆரோன் ஜோன்ஸ் 35 ரன்கள் எடுக்க முன்னாள் நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் 11 ரன்கள் சேர்த்தார். எனினும் இறுதியில் மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கம் ரன்களில் வெளியேறினர். இதனால் அமெரிக்க அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியில் சௌமியா சர்க்கார் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

டன்சித் ஹசன் 19 ரன்களிலும், நஜ்முல் ஹுசைன் 36 ரன்களும் எடுத்து வெளியேறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சகிபுல் ஹசன் 3 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய தவ்ஹீத் ஹிர்தாய் 25 ரன்கள் சேர்த்தார். ஒரு கட்டத்தில் வங்கதேச அணி வெற்றியின் அருகே சென்ற நிலையில் யாருமே எதிர்பாராத வகையில் அந்த அணி வீரர்கள் அடுத்தடுத்த ஆட்டம் இழந்தனர். மொஹம்மதுல்லா, ஜேக்கர் அலி ரிஷாத் ஹுசைன் போன்ற வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற வங்கதேச அணி 19.3 ஓவரில் 138 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அமெரிக்க பந்து வீச்சு தரப்பில் அலி கான் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அமெரிக்க அணி தொடரையும் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்று இருக்கிறது. அமெரிக்க அணி கிரிக்கெட் என்றாலே என்ன என்று தெரியாது என்று ரசிகர்கள் கூறுவார்கள். ஆனால் அவர்களே தற்போது பலம் வாய்ந்த வங்கதேசத்தை இரண்டு பூஜ்ஜியம் என்று வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, May 24, 2024, 12:36 [IST]
Other articles published on May 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+