வைபவ் சூர்யவன்ஷி மாஸ்.. உலகிலேயே எந்த வீரரும் செய்யாத ரெக்கார்டு.. சச்சினின் 37 ஆண்டு சாதனை தகர்ப்பு
ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி ஆட்டம் ஆடி அனைவரையும் மிரள வைத்துள்ளார். இந்தப் போட்டியில் வெறும் 18 பந்துகளில் அரை சதம் விளாசிய அவர், 19 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வரலாற்று சாதனைகளை அவர் படைத்துள்ளார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான இந்தப் போட்டியின் போது வைபவ் சூர்யவன்ஷியின் வயது 15 ஆண்டுகள் 118 நாட்கள் ஆகும். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் அரை சதம் அடித்த வீரர் என்ற புதிய உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதற்கு முன்பு ஐசிசி முழு உறுப்பினர் நாடுகளின் வீரர்களில் மிக இளம் வயதில் சர்வதேச அரை சதம் அடித்த வீரராக சச்சின் டெண்டுல்கர் இருந்தார். தற்போது சச்சினின் 37 ஆண்டு கால சாதனையை வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார். மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் 16 வயதிற்கு முன்பாகவே அரை சதம் அடித்த ஒரே வீரராக நேபாளத்தைச் சேர்ந்த குஷால் மல்லா (15 ஆண்டுகள் 340 நாட்கள்) மட்டுமே இருந்தார். அவரது சாதனையும் வைபவ் மூலம் தகர்க்கப்பட்டுள்ளது.
மேலும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் முதலாவது அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் செய்தார் வைபவ் சூர்யவன்ஷி.
வைபவ் சூர்யவன்ஷி படைத்த முக்கிய சாதனைகளின் பட்டியல்:
சர்வதேச கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் முதலாவது அரை சதம் அடித்த வீரர்கள் (முழு உறுப்பினர் அணிகள்):
- வைபவ் சூர்யவன்ஷி (இந்தியா) - 15 ஆண்டுகள் 118 நாட்கள் (எதிரணி: ஜிம்பாப்வே, டி20, 2026)
- சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 16 ஆண்டுகள் 213 நாட்கள் (எதிரணி: பாகிஸ்தான், டெஸ்ட், 1989)
- ஷாஹித் அப்ரிடி (பாகிஸ்தான்) - 16 ஆண்டுகள் 214 நாட்கள் (எதிரணி: இலங்கை, ஒருநாள், 1996)
- முஷ்டாக் முகமது (பாகிஸ்தான்) - 17 ஆண்டுகள் 39 நாட்கள் (எதிரணி: இந்தியா, டெஸ்ட், 1960)
- முகமது அஷ்ரஃபுல் (வங்கதேசம்) - 17 ஆண்டுகள் 63 நாட்கள் (எதிரணி: இலங்கை, டெஸ்ட், 2001)
ஆண்கள் சர்வதேச கிரிக்கெட்டில் 16 வயதிற்குள் 50 பிளஸ் ரன்கள் அடித்த வீரர்கள்:
- வைபவ் சூர்யவன்ஷி (இந்தியா) - 15 ஆண்டுகள் 118 நாட்கள் (டி20, 2026)
- குஷால் மல்லா (நேபாளம்) - 15 ஆண்டுகள் 340 நாட்கள் (ஒருநாள் போட்டி, 2020)
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் முதலாவது அரை சதம் அடித்தவர்கள்:
- வைபவ் சூர்யவன்ஷி (இந்தியா) - 15 ஆண்டுகள் 118 நாட்கள் (எதிரணி: ஜிம்பாப்வே, 2026)
- லூயிஸ் புரூஸ் (ஜிப்ரால்டர்) - 16 ஆண்டுகள் 56 நாட்கள் (எதிரணி: மால்டா, 2021)
- கவின் சதா (இந்தோனேசியா) - 16 ஆண்டுகள் 76 நாட்கள் (எதிரணி: சுவீடன், 2026)
- அலுசின் துரே (சியரா லியோன்) - 16 ஆண்டுகள் 89 நாட்கள் (எதிரணி: கானா, 2023)
- டென்ஜின் ராக்பே (பூட்டான்) - 16 ஆண்டுகள் 118 நாட்கள் (எதிரணி: சீனா, 2023)


Click it and Unblock the Notifications