Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“சச்சினிடம் பார்த்த அதே விஷயம் வைபவ் சூர்யவன்ஷியிடமும் இருக்கு”.. கிரண் மோரே புகழாரம்

ஜெய்ப்பூர்: 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி பேட்டிங் செய்வதைப் பார்த்தால், தனக்கு இளம் வயது சச்சின் டெண்டுல்கரைப் பார்ப்பது போலவே இருப்பதாக முன்னாள் இந்திய வீரர் கிரண் மோரே நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை மிகச் சாதாரணமாக எதிர்கொண்டு ஆடும் வைபவ் சூர்யவன்ஷி கிரண் மோரே மேலும் சில விஷயங்களை கூறி இருக்கிறார்.

2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிகளுக்குப் பின்னால் வைபவ் சூர்யவன்ஷயின் ரன் குவிப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது. இதுவரை 13 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள வைபவ், 579 ரன்களைக் குவித்துள்ளார். இதில் அவரது சராசரி 44.54 மற்றும் ரன் குவிக்கும் வேகம் (ஸ்ட்ரைக் ரேட்) 236.32 ஆகும். ஆரஞ்சு தொப்பிக்கான ரேஸில் தற்போது 3-வது இடத்தில் இருக்கும் வைபவ், இந்த சீசனில் மட்டும் இதுவரை 53 சிக்ஸர்களைப் பறக்கவிட்டுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் ஒரு இந்திய வீரர் அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவே ஆகும்.

Vaibhav Suryavanshi is drawing comparisons to Sachin Tendulkar by Kiran More

சச்சினுடன் ஒப்பீடு

வைபவ்வின் ஆட்டம் குறித்துப் பேசிய கிரண் மோரே, "நான் முதன்முதலில் சச்சின் டெண்டுல்கரைப் பார்த்தபோது, அவர் பெரிய பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆடிய விதம் எனக்குள் ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியது. அவர் ஒரு ஸ்பெஷல் வீரர் என்பது அப்போதே தெரிந்தது. அதே போன்ற ஒரு உணர்வை நான் இப்போது வைபவ் சூர்யவன்ஷியிடம் பார்க்கிறேன். அவர் மிகவும் தனித்துவமானவர். இந்தியாவிற்குப் பெருமை தேடித்தரப் பிறந்தவர். இவரைப் போன்ற வீரர்கள் கிடைப்பது நாட்டுக்கு நல்லது. கடவுளே இவரை கிரிக்கெட்டிற்காகச் செதுக்கி அனுப்பியது போல் உள்ளது" என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

சாதனைப் பட்டியல்

வைபவ் சூர்யவன்ஷியின் சாதனைகள் இதோடு நிற்கவில்லை. அண்மையில் முடிவடைந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் 7 போட்டிகளில் 439 ரன்கள் குவித்தார். அந்தத் தொடரில் 30 சிக்ஸர்களை அடித்து, டெவால்ட் பிரெவிஸின் சாதனையை முறியடித்தார். டி20 கிரிக்கெட்டில் இதுவரை 31 போட்டிகளில் விளையாடி 1280 ரன்கள் குவித்துள்ள அவர், 4 சதங்களையும் விளாசியுள்ளார்.

IPL 2026: சிஎஸ்கே ரசிகர்களை வம்பிழுத்த சுப்மன் கில்.. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'நன்றி 2’ பதிவு

IPL 2026: சிஎஸ்கே ரசிகர்களை வம்பிழுத்த சுப்மன் கில்.. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'நன்றி 2’ பதிவு

அவரது இந்த அபாரமான ஆட்டத்தைப் பாராட்டும் விதமாக, இலங்கை செல்ல உள்ள 'இந்தியா ஏ' அணியில் அவருக்கு பிசிசிஐ இடம் அளித்துள்ளது. 15 வயதிலேயே உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கும் வைபவ், இந்திய கிரிக்கெட்டின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படுகிறார்.

Story first published: Friday, May 22, 2026, 9:36 [IST]
Other articles published on May 22, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+