Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வைபவ் சூர்யவன்ஷி பொறுமைக்கு கிடைத்த ஜாக்பாட்.. இந்திய பிளேயிங் 11-இல் இடம் அளிக்க முடிவு

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது சர்வதேச டி20 போட்டியில், இஷான் கிஷனுக்குப் பதிலாக 15 வயது இளம் அதிரடி பேட்டர் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்குவார் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் அதிரடியாக அறிவித்துள்ளார். சீனியர் வீரர்கள் உள்ளதால் வைபவ் சூர்யவன்ஷி தனது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என்று கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறி இரண்டே நாள்களே ஆன நிலையில், வைபவுக்கு இந்த அதிர்ஷ்ட வாய்ப்பு கதவைத் தட்டியுள்ளது.

கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த முதல் போட்டியில் 3-வது இடத்தில் ஆடாமல் இஷான் கிஷன் 5-வது வரிசைக்கு தள்ளப்பட்டது ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கம் அளித்த பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக், "இஷான் கிஷனுக்கு இடுப்புப் பகுதியில் தசைப்பிடிப்பு காயம் ஏற்பட்டது. அதனால்தான் திலக் வர்மா 3-வது இடத்தில் முன்னதாகக் களமிறக்கப்பட்டார். இஷான் கிஷன் 2-வது போட்டியில் விளையாடுவது சந்தேகம் தான். மருத்துவக் குழுவின் அனுமதி கிடைக்காத பட்சத்தில், அவருக்குப் பதிலாக வைபவ் சூர்யவன்ஷி விளையாடுவார். அவரே எங்கள் அணியின் முதல் தேர்வாக இருக்கிறார்" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Vaibhav Suryavanshi Set to Replace Injured Ishan Kishan for 2nd T20I Against New Zealand

முதல் போட்டியில் காயத்துடனே 5-வது வீரராகக் களம் கண்ட இஷான் கிஷன், வெறும் 3 பந்துகளை மட்டுமே சந்தித்து சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு பின் ஆலனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் இஷான் கிஷன் காயம் காரணமாக 2வது டி20 போட்டியில் இருந்து நீக்கப்படுவதாக கூறி உள்ளது.

அதனால் ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு சர்வதேச டி20 போட்டிகளில் ஆடாமல் தொடர்ந்து பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்த வைபவ் சூர்யவன்ஷிக்கு, இந்திய பிளேயிங் 11-இல் மீண்டும் ஆடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் தொடக்க வீரராக ஆடுவாரா? அல்லது இஷான் கிஷனின் 3ஆம் வரிசையில் பேட்டிங் செய்வாரா? என்ற கேள்வி மட்டுமே உள்ளது.

ENG vs SL:

ENG vs SL: "நான் டபுள் செஞ்சுரி அடிச்சதே வேஸ்ட்".. இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் விரக்தி

ஹாக்லி ஓவல் மைதானத்தில் வரும் அக்டோபர் 24 சனிக்கிழமை அன்று 2-வது டி20 போட்டி நடைபெற உள்ளது. முதல் ஆட்டத்தில் 2 பந்துகள் மீதமிருக்க 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது போட்டியில் களமிறங்க உள்ள வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Story first published: Friday, October 23, 2026, 10:58 [IST]
Other articles published on Oct 23, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+