Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு திரும்பிட்டாங்க... ஆனா கண்காணிப்பு தொடர்ந்துக்கிட்டுதான் இருக்கு

டெல்லி : ஐபிஎல் 2021 தொடர் கொரேனா பாதிப்பு காரணமாக தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முதலில் கேகேஆர் அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

இந்நிலையில் அவர்களின் உடல்நிலை குறித்து பிசிசிஐ தெளிவுப்படுத்தியுள்ளது.

ஐபிஎல் 2021 தொடர்

ஐபிஎல் 2021 தொடர்

அடுத்தடுத்த அணி வீரர்களுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பையடுத்து ஐபிஎல் 2021 தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் தங்களது சொந்த ஊர்கள் மற்றும் நாடுகளுக்கு சென்றுள்ளனர். 29 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் மீண்டும் போட்டிகள் எப்போது துவங்கும் என்ற கேள்வி ரசிகர்களிடம் காணப்படுகிறது.

கேகேஆர் வீரர்களுக்கு பாதிப்பு

கேகேஆர் வீரர்களுக்கு பாதிப்பு

தொடர்ந்து 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் கேகேஆர் அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியருக்கு முதன்முதலில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து அடுத்தடுத்த கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டு ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டன.

பிசிசிஐ விவாதம்

பிசிசிஐ விவாதம்

ஐபிஎல் போட்டிகளை தற்காலிகமாகவே தள்ளி வைத்துள்ளதாகவும் தொடர் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் எங்கு, எப்போது நடைபெறும் என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. இந்நிலையில் இங்கிலாந்து தொடரின்போது இதுகுறித்து விவாதிக்கப்படும் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பு

சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பு

இந்நிலையில் கடந்த 10 நாட்களாக கேகேஆர் முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட கேகேஆர் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோர் தற்போது தங்களது சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை

அவர்கள் இருவருக்கும் தற்போது கொரோனா நெகட்டிவ் உள்ள நிலையிலும் அவர்களை தொடர்ந்து கேகேஆர் அணி கண்காணிக்கும் என்றும் அவர் சொந்த ஊர்களுக்கு சென்ற பின்பும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Monday, May 10, 2021, 21:06 [IST]
Other articles published on May 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+