100 வயது.. உலகின் மிக வயதான இந்திய கிரிக்கெட் வீரர் காலமானார்.. பிராட்மேனுக்கு நெருக்கம்
மும்பை : உலகின் மிக வயதான முதல் தர கிரிக்கெட் வீரர் வசந்த் ரைஜி காலமானார். அவருக்கு வயது 100.
Recommended Video
கடந்த ஜனவரி மாதம் தான் அவர் தன் நூறாவது வயதை எட்டினார். அப்போது சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஸ்டீவ் வாஹ் ஆகியோர் அவரது பிறந்த நாளை அவரது வீட்டிற்கே சென்று கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

வசந்த் ரைஜி குறைந்த போட்டிகளில் மட்டுமே ஆடி இருந்தாலும், கிரிக்கெட் குறித்த எட்டு தவிர்க்க முடியாத புத்தகங்களை எழுதி உள்ளார்.
வசந்த் ரைஜி கடந்த சனிக்கிழமை அன்று இரவு 2.20 மணிக்கு தன் வீட்டில் மரணம் எய்தினார். அவருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.
வசந்த் ரைஜி கடந்த 1941இல் மும்பை அணிக்காக முதல் தர போட்டிகளில் ஆடி உள்ளார். கிளப் கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் பங்கேற்றுள்ளார். ஒன்பது முதல் தர போட்டிகளில் மட்டுமே ஆடி உள்ள அவர், ஒரு சார்ட்டட் அக்கவுண்டன்ட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர் கிரிக்கெட் வரலாறு குறித்து அதிகம் அறிந்தவர். கடந்த 80 ஆண்டுகளாக கிரிக்கெட்டை உற்று நோக்கி வரும் அவர் கிரிக்கெட் தொடர்பாக எட்டு புத்தங்களை எழுதி உள்ளார்.
உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக அறியப்படும் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் இவருடன் கிரிக்கெட் தொடர்பாக மனம் திறந்து விவாதம் செய்வார். கிரிக்கெட் தொடர்பாக அதிகம் அறிந்த வசந்த் ரைஜி எப்போதும் இரு வீரர்களை ஒப்பிட்டு பேச மாட்டார். அதுவே அவரது சிறப்பு.


Click it and Unblock the Notifications