For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியை சிஎஸ்கேவுக்கு கூட்டிட்டு வந்ததே இவர் தான்.. முதல் ஐபிஎல்இல் நடந்த சம்பவம்.. விபி சந்திரசேகர்!

சென்னை : தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விபி சந்திரசேகர் சென்னையில் நேற்று காலமானார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனியை அழைத்து வந்தவர் விபி சந்திரசேகர் தான் என்ற தகவல் தற்போது பரவி வருகிறது.

முன்னாள் கிரிக்கெட் வீரர், பயிற்சியாளர், வர்ணனையாளர், டிஎன்பிஎல் அணி உரிமையாளர் என பன்முகம் கொண்ட விபி சந்திரசேகர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் மூன்று ஆண்டுகள் பணியில் இருந்தார்.

இந்தா பிடி..!! வாங்கியதை அப்படியே திருப்பிக் கொடுத்த நியூசி...! காலே டெஸ்டில் திணறும் இலங்கை...!! இந்தா பிடி..!! வாங்கியதை அப்படியே திருப்பிக் கொடுத்த நியூசி...! காலே டெஸ்டில் திணறும் இலங்கை...!!

ஐபிஎல் ஏலம்

ஐபிஎல் ஏலம்

தேர்வுக் குழு தலைவராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2008ஆம் ஆண்டு பணியாற்றிய விபி சந்திரசேகர் முதல் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்றார். அப்போது அவர் தான் தோனியை தேர்வு செய்ய முக்கிய காரணமாக இருந்தார் என கூறப்படுகிறது.

முதல் தேர்வு யார்?

முதல் தேர்வு யார்?

இது குறித்து விபி சந்திரசேகர் முன்பு அளித்த பேட்டி ஒன்றில் அப்போது என்ன நடந்தது என கூறி இருக்கிறார். 2008 ஐபிஎல் ஏலத்திற்கு முன் உரிமையாளர் சீனிவாசன் நட்சத்திர வீரராக யாரை தேர்வு செய்யப் போகிறீர்கள்? என விபி சந்திரசேகரிடம் கேட்டுள்ளார்.

சேவாக் வேண்டாமா?

சேவாக் வேண்டாமா?

அப்போது தோனி பெயரை குறிப்பிட்டுள்ளார் விபி சந்திரசேகர். வீரேந்தர் சேவாக்கை ஏன் தேர்வு செய்யக் கூடாது? என கேட்டுள்ளார் சீனிவாசன். காரணம், சேவாக் நீண்ட நாட்களாக இந்திய அணியில் ஆடி வரும் அனுபவ வீரர் என்பதோடு டி20க்கு ஏற்ற அதிரடி ஆட்டம் ஆடக் கூடியவர்.

தோனி தான் சரி

தோனி தான் சரி

அதற்கு பதில் அளித்த விபி சந்திரசேகர், சேவாக் ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு ஈடு கொடுக்க மாட்டார். ஆனால், தோனி ஒரு கேப்டன், விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக போட்டியை தனியாக மாற்றக் கூடியவர் என்று கூறி உள்ளார்.

முதல் விதை

முதல் விதை

அப்படித் தான் தோனியை தேர்வு செய்து இருக்கிறார் விபி சந்திரசேகர். அதன் பின் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரிக்க முடியாத அங்கமாக மாறியது வரலாறு. அதற்கு முதல் விதை போட்டது விபி சந்திரசேகர் தான்.

டிஎன்பிஎல் அணி

டிஎன்பிஎல் அணி

விபி சந்திரசேகர் டிஎன்பிஎல் தொடர் துவங்கப்பட்ட போது அதில் காஞ்சி வீரன்ஸ் அணியை வாங்கினார். மற்ற அணிகளை பெரிய நிறுவனங்களை நடத்தி வருபவர்கள் வாங்கிய நிலையில், ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரராக, கிரிக்கெட் மீது கொண்ட பந்தம் காரணமாக அந்த அணியை வாங்கினார்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

எனினும், காஞ்சி வீரன்ஸ் அணி மற்றும் மற்ற கிரிக்கெட் தொடர்புகளில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதுவும், விபி சந்திரசேகர் மரணத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. முதலில் மாரடைப்பால் மரணம் என கூறப்பட்ட நிலையில், தற்கொலை என்றும் தகவல்கள் வந்துள்ளன. காவல்துறை விபி சந்திரசேகர் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Story first published: Friday, August 16, 2019, 12:05 [IST]
Other articles published on Aug 16, 2019
English summary
VB Chandrasekhar brought Dhoni to CSK says fans after his demise.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X