Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய ஒருநாள் அணியை வெல்ல முடியாது- உலகக் கோப்பையை வென்றுவிடுமாம்: சொல்வது டெண்டுல்கர்

சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பட்டம் வெல்லும் அணிகளில் இந்தியாவுக்கும் இடம் இருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற உள்ளது. இந்திய அணியோ டெஸ்ட் போட்டிகளில் படுகேவலமாக தோற்று ஒருநாள் போட்டியில் படுசூப்பராக வென்றுள்ளது.

இதனால் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி எப்படி விளையாடுமோ என்ற கேள்விக்குறி இருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் டெண்டுல்கர் நேற்று கூறியதாவது:

'Versatile' India strong contenders for World Cup 2015: Tendulkar

நான் இந்திய அணியில் உள்ள வீரர்கள் அனைவரையும் நன்றாக அறிவேன். அவர்களுடைய திறமைகளும் எனக்குத் தெரியும்.

டெஸ்ட் போட்டிகளில் நமது அணி நிச்சயம் மீண்டும் எழுச்சி பெறும். ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியை வெல்லவே முடியாது. ஒருநாள் போட்டிகளில் போராடி ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகளில் இந்தியாவுக்கு முக்கிய இடம் இருக்கிறது. நமது அணியில் சமச்சீரான தன்மை உள்ளது. இந்த அணியை வெல்வது கடினம்.

பலதிறமையாளர்களைக் கொண்டது இந்தியாவின் ஒருநாள் டீம். பேட்டிங்கில் வலு உள்ளது. பந்து வீச்சும் அற்புதமாக இருக்கிறது. பீல்டிங் பாராட்டுக்குரியதாக இருக்கிறது.

இவ்வாறு டெண்டுல்கர் கூறியுள்ளார்.

Story first published: Thursday, September 4, 2014, 13:17 [IST]
Other articles published on Sep 4, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+