Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் "சிரிப்பு போலீஸ்" பாஸ்.. நீங்க வேற... கலகலக்க வைக்கும் ஷிகர் தவான்

டெல்லி: நான் ரொம்ப சீரியஸானவன் என்று பலரும் நினைக்கிறார்கள். கிடையவே கிடையாது. பயங்கர ஜாலி பார்ட்டி நான். எனது தோற்றத்திற்கு அப்படியே எதிர்மாறானவன் நான் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான்.

இந்திய கிரிக்கெட்வாரியத்தின் இணையதள டிவிக்காக ஷிகர் தவானை, இன்னொரு தொடக்க ஆட்டக்காரான ரோஹித் சர்மா பேட்டி எடுத்துள்ளார். அந்த வீடியோ பிசிசிஐ.டிவி இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது.

அதில் தவானிடம் ஜாலியாக பல கேள்விகளைக் கேட்டுள்ளார் ரோஹித் சர்மா. அதன் விவரம்...

பார்ம் முக்கியம் பாஸ்

பார்ம் முக்கியம் பாஸ்

அணியின் நலனுக்கு எனது பார்ம் முக்கியம் என்று கூறியதற்காக முதலில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். அடிப்படை விஷயங்களை நான் தொடர்ந்து சரியாகவே செய்து வருகிறேன்.

சரியாத்தானே செய்றேன்

சரியாத்தானே செய்றேன்

செய்வதை சரியாக செய்தாலே போதும். தானாகவே ஆட்டத் திறன் சிறப்பாக மாறி விடும். பந்தை அடிப்பதை விட அதை அடிக்கும் நேரம்தான் மிக முக்கியமானது. அதை சரியாக கணிக்க வேண்டியது அவசியம்.

அடிக்க வேண்டியதும் அவசியம்

அடிக்க வேண்டியதும் அவசியம்

டுவென்டி 20 போட்டிகளில் சிறப்பாக அடித்து ஆட வேண்டியதும் அவசியம். பெரிய ஷாட்டுகள் அடிக்க வேண்டியதும் முக்கியமானது. நான் மிகக் குறைந்த அளவிலான "டாட் பால்களை"யே விரும்புவேன். அப்போதுதான் நெருக்கடி குறையும்.

ரசிகர்களே ரெடியாகுங்க

ரசிகர்களே ரெடியாகுங்க

அடுத்து உலகக் கோப்பைப் போட்டிகள் வருகின்றன. ரசிகர்கள் வான வேடிக்கையை ரசிக்க ஆயத்தமாக வேண்டும். இப்போதும், எப்போதும் விளையாடுவது போலவே நான் தொடர்ந்து ஆடுவேன்.

நானும் ரோஹித்தும்

நானும் ரோஹித்தும்

ரோஹித்துடன் இணைந்து வழக்கம் போல மிகச் சிறந்த அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து ஆடுவேன். அதைத்தான் ரசிகர்களும் விரும்புவார்கள். அது அணிக்கும் அவசியமானது.

சேட்டை மன்னர்கள்

சேட்டை மன்னர்கள்

அணி வீரர்களிடையே சேட்டை செய்வதில் நானும், ஹர்பஜன் சிங்கும் சேர்ந்து விட்டால் அமர்க்களமாக இருக்கும். சக வீரர்களை ஏமாற்றி வேடிக்கை பார்த்து ரசிப்போம்.

நானெல்லாம் சீரியஸே கிடையாது பாஸ்

நானெல்லாம் சீரியஸே கிடையாது பாஸ்

நான் ரொம்ப சீரியஸானவன் என்று பலரும் நினைக்கிறார்கள். கிடையவே கிடையாது. பயங்கர ஜாலி பார்ட்டி நான். எனது தோற்றத்திற்கு அப்படியே எதிர்மாறானவன் நான்.

சிரிக்க வைப்பது பிடிக்கும்

சிரிக்க வைப்பது பிடிக்கும்

நான் சிரிப்பதோடு மற்றவர்களையும் சிரிக்க வைத்து ஜாலியாக்குவேன். அனைவரும் சிரித்தபடி இருக்க வேண்டும். அதுதான் நமக்குப் பிடிக்கும். அடுத்தவர்களை சிரிக்க வைப்பது கடவுள் தந்த வரமாகும். அது எனக்கு உள்ளது என்றார் தவான்.

Story first published: Monday, February 15, 2016, 17:30 [IST]
Other articles published on Feb 15, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+